ராணுவத்தினரின் தவறுதலான தாக்குதல்: கிராம மக்கள் 30 பேர் பலி!

இந்தியா

ராணுவத்தினர் நடத்திய தவறுதலான டிரோன் தாக்குதலில் பண்டிகைக்காக ஒன்று சேர்ந்திருந்த கிராம மக்கள்  30 பேர் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரிய நாட்டின் வடமேற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் ஆயுத கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. அவர்களுக்கு எதிராக ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் நைஜீரியாவின் வடமேற்கில் உள்ள கடுனா மாகாணம் டுடுன்பிரி கிராமத்தில் ராணுவம் டிரோன் ஒன்று தாக்குதல் நடத்தியது. அந்தக் கிராமத்தில் பண்டிகை ஒன்றுக்காக கிராம மக்கள் ஏராளமானோர் ஒன்று கூடியிருந்தனர். அப்போது ராணுவ டிரோன் தவறுதலாக கிராம மக்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இதில் ஏராளமானோர் காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை குறித்து அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. ஆனால்,  கிராம மக்கள் 30 பேர் பலியானதாகவும், 60 பேர் காயம் அடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர். மற்றொரு தகவலில் 85 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

`உள்ளேயே செத்து போயிருப்போம்`: வீட்டுக்குள் தத்தளித்த தாய், சிறுவர்கள்!

கரையை கடந்தது மிக்ஜாம் புயல்!

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமீன் மனு தள்ளுபடி!

மின்சார ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *