இந்தியாவில் 3 முறை எம்.எல்.ஏவான ஜெர்மன் சிட்டிசன்; இந்திய குடியுரிமை பறிப்பு!

Published On:

| By Minnambalam Login1

ஜெர்மன் சிட்டிசன் என்பதை மறைத்து இந்தியாவில் ஒருவர் 3 முறை எம்.எல்.ஏ ஆகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாரதிய ராஷ்ட்ரீய சமீதி கட்சி சார்பாக சென்னமனேனி ரமேஷ் என்பவர் தெலங்கானா மாநிலத்தில் வேமுலாடாவா தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தார். ஒரு முறை இரு முறை அல்ல நான்கு முறை போட்டியிட்டு, 3 முறை இதே தொகுதியில் எம்.எல்.ஏ ஆனார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரோகித் என்பவர், தற்போதைய வேமுலவாடா தெகுதி எம்.எல்.ஏ வான ஆதி சீனிவாஸ் சார்பாக ஹைதராபாத் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், சென்னமனேனி ரமேஷ் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜெர்மன் குடியுரிமை பெற்றிருப்பதாகவும், அது தொடர்பாக விசாரணை நடத்தி உண்மையை அம்பலப்படுத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இது தொடர்பான விசாரணையில், கடந்த 2008 ஆம் ஆண்டு ரமேஷ் ஜெர்மன் சிட்டிசன் ஆகியிருப்பது உறுதி செய்யப்பட்டது. மத்திய அரசும் நீதிமன்றத்தில் ரமேஷ் ஜெர்மன் குடியுரிமை பெற்றவர் என்பதை உறுதி செய்தது. இதையடுத்து, தெலங்கானா உயர்நீதிமன்றம் அவரின் இந்திய குடியுரிமையை பறிக்க உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.

மேலும், ஜெர்மன் குடியுரிமை பெற்றிருப்பதை மறைத்து தேர்தலில் போட்டியிட்டதற்காக சீனிவாசனுக்கு 30 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதில், 25 லட்சத்தை ரமேஷ் ஜெர்மன் சிட்டிசன் என்பதை நிரூபிக்க போராடிய ஆதி சீனிவாசுக்கு வழங்கவும் எஞ்சிய 5 லட்சத்தை தெலங்கானா சட்டமன்றத்துக்கு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்திய வரலாற்றில் எம்.எல்.ஏ பதவி வகித்த ஒருவரின் இந்திய குடியுரிமை பறிக்கப்பட்டது இதுவே முதன்முறை. இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி விஜேஷன் ரெட்டி கூறுகையில், இந்திய குடிமகன் மட்டுமே இந்திய தேர்தலில் போட்டியிட வேண்டுமென்பது விதி. அப்படியிருக்கையில், சென்னமனேனி சீனிவாஸ் நீதித்துறையையும் அரசியல் அமைப்பு சட்டத்தையுமே ஏமாற்றியுள்ளார் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

ஒரே படம் தான்… BMW கார் வாங்கிய சிவகார்த்திகேயன் இயக்குநர்

ஆறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் : வானிலை மையம் எச்சரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel