மத்தியப் பிரதேச மாநிலத்தில் மூன்று முஸ்லிம் சிறுவர்களை ஒருவர் செருப்பால் அடித்து ஜெய் ஸ்ரீ ராம் சொல்லவைக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
சமூக வலைத் தளங்களில் இன்று (டிசம்பர் 6) வெளியாகி வைரலாகியுள்ள காணொளியில், படிக்கட்டில் உட்கார்ந்திருக்கும் மூன்று சிறுவர்களை ஒரு இளைஞர் செருப்பால் அடித்து ‘ஜெய் ஸ்ரீ ராம்’ சொல்லு என்கிறார்.
பயந்த சிறுவர்களும் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று சொல்கிறார்கள். ஆனால் அவர்களை மீண்டும் மீண்டும் அந்த இளைஞர் செருப்பால் அடிக்கிறார்.
மேலும் சிகரட் அடிப்பீர்களா என்று அந்த நபர் அச்சிறுவர்களை திட்டுகிறார்.
அந்த மூன்று சிறுவர்களில் ஒருவர் அடியின் வலி தாங்காமல் ‘அல்லாஹ்’ என்று அலற, அவரை மீண்டும் மீண்டும் இந்த இளைஞர் அடிக்கிறார். இந்த காணொளியை அந்த இளைஞர் அருகில் இருந்தவர் எடுத்ததாக தெரிகிறது.
இந்த காணொளியின் அடிப்படையில் தற்போது முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரத்லம் மாவட்டம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராகேஷ் காகா கூறுகையில் “அந்த காணொளி ஒரு மாத பழமையானதாக தெரிகிறது. இது குறித்து சைபர் கிரைம் துறை விசாரித்து வருகிறது” என்றார்.
அந்த சிறுவர்களின் வயது 13, 11 மற்றும் 6 என்பது குறிப்பிடத்தக்கது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
வருண் குமார் ஐபிஎஸ் vs சீமான் : அண்ணாமலை சொன்ன கருத்து!
நள்ளிரவில் அமைச்சர் சிவசங்கருக்கு வந்த போன்… அடுத்து நடந்தது என்ன?
வரலாற்றை சுட்டிக் காட்டிய பிசிசிஐ : ஐசிசி கூட்டத்தில் வாலை சுருட்டிய பாகிஸ்தான்