மகா கும்பமேளா: செலவு ரூ.7,500 கோடி… வரவு எத்தனை கோடி?

Published On:

| By Raj

மகா கும்பமேளாவில் ரூ.7,500 கோடி முதலீட்டில் ரூ.3 லட்சம் கோடி
பெறப்பட்டதாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது
கும்பமேளா. 12 முறை கழித்து நடைபெறுவது மகா கும்பமேளா. அதாவது 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது.

அந்த வகையில் இந்த ஆண்டு ஜனவரி 13-ம் தேதி தொடங்கி, பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெற்றது. கும்பமேளாவின் முக்கிய அம்சமாக கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புராண நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவது வழக்கம்.

இந்த ஆண்டு நடைபெற்ற கும்பமேளாவுக்காக திரிவேணி சங்கமத்தில் தற்காலிக
நகரமே அமைக்கப்பட்டது. சுமார் 4 ஹெக்டேர் பரப்பளவில் 25 தனித்தனி
பகுதிகள், 12 படித்துறைகள், 23 சமையல் கூடங்கள், 1.5 லட்சம் கழிப்பறைகள்,
11 மருத்துவமனைகள் அமைக்கப்பட்டன.

மொத்தம் 45 நாட்கள் நடைபெற்றுள்ள நிலையில் இதுவரை 66 கோடியே 30 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திரிவேணியில் புனித நீராடியுள்ளனர். இது உலக வரலாற்றில் என்றும் மறக்க
முடியாத நிகழ்வாக மாறியுள்ளது. 3 Lakh Crore Revenue from Kumbh Mela

இந்த நிலையில் மகா கும்பமேளாவால் உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு கிடைத்த
லாபம் குறித்த தகவல்களை சட்டப்பேரவையில் அம்மாநில முதல்வர் யோகி
ஆதித்யநாத் பகிர்ந்துள்ளார்.

“கும்பமேளாவுக்கு மாநில அரசு முதலீடு செய்த ரூ.7,500 கோடியில், கும்பமேளா ஏற்பாட்டுக்கு ரூ.1,500 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டது. மீதத் தொகை முழுவதும் பிரக்யாக்ராஜை அழகுபடுத்துவதற்காக செலவு செய்யப்பட்டது. வெறும் ரூ.7,500 கோடி முதலீடு செய்தபோதிலும், ரூ. 3
லட்சம் கோடியை ஈட்டி லாபம் பெறப்பட்டுள்ளது. 3 Lakh Crore Revenue from Kumbh Mela

மகா கும்பமேளா போக்குவரத்து துறை மூலம் ரூ.1.5 லட்சம் கோடியும், ஹோட்டல் துறை மூலம் ரூ.40,000 கோடி, உணவுத் துறை ரூ.33,000 கோடி, பிரசாதம் வழங்கும் துறை ரூ.20,000 கோடி, நன்கொடை ரூ. 660 கோடி, சுங்க வசூல் துறை ரூ.300 கோடி, இதர துறைகள் மூலம் ரூ.66,000 கோடி
ஈட்டப்பட்டுள்ளது.

ஆனாலும் கடத்தல், கொள்ளை போன்ற குற்றங்கள் எதுவும் மகா கும்பத்தில் நடக்கவில்லை. இதற்கு உறுதுணையாக இருந்த மகா கும்பமேளா நிர்வாகம், உள்ளூர் நிர்வாகம், காவல்துறை, துப்புரவுப் பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மத அமைப்புகள், மத்திய மற்றும்
உத்தரப்பிரதேச அரசுகளின் அனைத்துத் துறைகளுக்கும் நன்றி” எனத்
தெரிவித்துள்ளார். 3 Lakh Crore Revenue from Kumbh Mela

இந்த கும்பமேளாவின்போது கடந்த மாதம் மௌனி அமாவாசை அன்று ஏற்பட்ட கூட்ட
நெரிசலில் சுமார் 30 பேர் உயிரிழந்தனர். மேலும், 60 பேர் காயமடைந்தனர்
என்று அரசாங்க தரவுகள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த மாதம் டெல்லியில் உள்ள பிரதான ரயில் நிலையத்தில் பிரயாக்ராஜ் செல்லும் ரயில்களைப் பிடிக்க மக்கள் கூட்டம் அலைமோதியபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 18 பேர்
உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அடுத்த மகா
கும்பமேளா 2169-ம் ஆண்டு நடைபெறுகிறது. 3 Lakh Crore Revenue from Kumbh Mela

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share