மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு!

Published On:

| By Kavi

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது மத்திய அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக ஒரு தவணை அகவிலைப்படி உயர்வும், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணமும் வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சரவை இன்று (அக்டோபர் 16) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தற்போதைய அடிப்படைச் சம்பளம் / ஒய்வூதியத்தின் 50%-ஐவிட மூன்று சதவீத (3%) உயர்வு. 01.07.2024 தேதி முதல் நடைமுறைக்கு வரும்.

விலைவாசி உயர்வை ஈடுகட்டும் விதமாக, ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப, 7-வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரை அடிப்படையில் வழங்கப்படுகிறது. இந்த உயர்வு மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.9,448.35 கோடி செலவு ஏற்படும்.

இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் 49.18 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 64.89 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

கடும் மழைக்கிடையே ஆவின் பால் விற்பனை படுஜோர்!

மீண்டும் ரெட் அலர்ட் ஏன்?: வானிலை ஆய்வு மைய இயக்குநர் விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment