29 communities flooded after dam breach in Ukraine

உக்ரைன் அணை உடைப்பு: வெள்ளத்தில் மூழ்கிய 29 கிராமங்கள்!

இந்தியா

ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு உக்ரைன் பகுதியில் அமைந்துள்ள அந்த நாட்டின் முக்கிய அணையில் ஏற்பட்ட திடீா் உடைப்பு காரணமாக, நீப்ரோ நதியை ஒட்டிய 29 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கி கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேல் ஆகியும் முடிவுக்கு வராமல் உள்ளதால் உலக நாடுகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

2022 பிப்ரவரி மாத இறுதியில் ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் மீதான போர் நடவடிக்கையைத் தொடங்கினார். ஆரம்பத்தில் ரஷ்ய படைகள் வேகமாக முன்னேறி உக்ரைனை திணறடித்தன.

இருப்பினும், அமெரிக்கா மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் பதில் தாக்குதலைச் சிறப்பாக மேற்கொண்டு போரில் தாக்குப்பிடித்து வருகிறது.

இந்த நிலையில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு உக்ரைன் பகுதியில் அமைந்துள்ள அந்த நாட்டின் முக்கிய அணையில் ரஷ்யா தாக்குதல் நடத்தியது.

இந்த திடீா் உடைப்பு காரணமாக, நீப்ரோ நதியையொட்டிய 29 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து உக்ரைன் உள்துறை அமைச்சா் இஹாா் க்ளிமென்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“நோவா ககோவா அணையில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக, நீப்ரோ நதிக்கரையில் 29 ஊா்கள் மற்றும் கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

நீரில் மூழ்கிய பத்து பெரிய குடியிருப்புப் பகுதிகள் உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள நீப்ரோ நதிக்கரை பகுதியைச் சோ்ந்தவை. ஒன்பது குடியிருப்புகள் ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள இடது கரைப் பகுதியைச் சோ்ந்தவை” என்று தெரிவித்துள்ளார்.

இந்த அணை உடைப்பால் அணையிலிருந்து வெளியேறும் தண்ணீரால் உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மட்டுமின்றி ரஷ்ய கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் நிலை உள்ளது.

இதனால் தாழ்வான அந்தப் பகுதிகளில் உள்ள வீடுகளுடன் சாலைகள், வா்த்தக நிலையங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், உயா்வான பகுதியில் அமைந்துள்ள ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுமின் உற்பத்தியகமான ஸபோரிஷியா மின்நிலைய அணு உலைகளைக் குளிரூட்டுவதற்கான நீா் இருப்பு குறையும் ஆபத்தும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ராஜ்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: பீட்ரூட் டிக்கி

+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *