ரசாயன வாயு தாக்கி 25 மாணவிகள் மயக்கம்!

இந்தியா

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கல்லூரியில் ரசாயன வாயு தாக்கி 25 மாணவிகள் மயக்கமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாவட்டம் ஹைதராபாத்தில் உள்ள கிழக்கு மாரேட்பல்லியில் கஸ்தூரிபா அரசு மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் வேதியியல் ஆய்வகத்தில் இருந்து இன்று (நவம்பர் 18) மதியம் உணவு இடைவேளை நேரத்தில் ரசாயன வாயு கசிவு ஏற்பட்டுள்ளது.

வாயு வெளியாக ஆரம்பித்த உடனே சில மாணவிகள் மூச்சு விடுவதற்கு சிரமாக இருப்பதை உணர்ந்துள்ளனர். ஆனால் சிறிது நேரத்திலேயே மாணவிகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளனர். இதனைக் கண்ட கல்லூரி நிர்வாகம் மருத்துவமனை மற்றும் காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளது.

மயங்கி விழுந்த மாணவிகள் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 மாணவிகளைத் தவிர மற்ற மாணவிகளுக்கு முதலுதவி சிகிச்சை மட்டும் அளிக்கப்பட்டு வீட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.

3 மாணவிகளும் 6 மணி நேர மருத்துவக் கண்காணிப்பிற்குப் பிறகு அபாயக்கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

மாணவிகள் மயங்கி விழுந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து தடயவியல் குழு கல்லூரிக்கு நேரில் சென்று ரசாயன வாயு கசிவு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

நல்வாய்ப்பாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் மாணவிகள் 25 பேர் ஒரே நேரத்தில் மயங்கி விழுந்த சம்பவம் மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் மக்களிடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோனிஷா

தரமற்ற உணவு: அம்மா உணவகத்துக்கு மாநகராட்சி நோட்டீஸ்!

முதல்வர் குறித்து விமர்சனம்: பாஜக நிர்வாகி முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.