234 சூதாட்டம், கடன் செயலிகளுக்குத் தடை!
இந்தியாவில் சீன இணைப்புகளைக் கொண்ட 200க்கும் மேற்பட்ட செயலிகளுக்குத் தடை விதிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.
சமீப நாட்களாக பயன்பாடு மக்களிடையே அதிகரித்துள்ளது. பணம் சம்பாதிக்கும் ஆசையில் இதுபோன்ற செயலிகளைப் பதிவிறக்கம் செய்து விளையாடுபவர்கள், ஒரு கட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை முயற்சிக்குத் தள்ளப்படுகின்றனர்.
இது ஒரு பக்கம் என்றால் சிலர் கடன் செயலிகள் மூலம் கடன் பெற்றுவிட்டு, திரும்பச் செலுத்த முடியாமல் தவிக்கும் நிலையும் உள்ளது.
இதுபோன்ற சூழலில் சில செயலிகளால் மக்களின் தரவுகள் திருடப்படுவதாக மத்திய அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்தச்சூழலில் அவசர நடவடிக்கையாகச் சீனாவின் 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளைத் தடை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் பாதகமான வகையில் உள்ள செயலிகளைத் தகவல் தொழில்நுட்பச் சட்டப்பிரிவு 69ன் கீழ் தடை செய்யப்படும் என மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை விளக்கமளித்துள்ளது.
ஆறு மாதங்களுக்கு முன்பு 288 சீன செயலிகளைப் பகுப்பாய்வு செய்யத் தொடங்கியதாகவும், அதன் முடிவில் 234 செயலிகளைத் தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
முன்னதாக 2020 ஜூன் மாதம் டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. அதே ஆண்டு செப்டம்பரில் 118 செயலிகளுக்கும், 2020 நவம்பரில் 43 செயலிகளுக்கும், 2022 பிப்ரவரியில் 54 சீன தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
ஈரோடு சுவாரஸ்யம்: விதவை போல் வந்து வேட்புமனு தாக்கல்!
கடலூர் மாவட்டத்துக்கு புதிய எஸ்.பி.: யார் இந்த ராஜாராம்?