north korea killed

தென் கொரியாவின் பாடல்களைக் கேட்ட வட கொரியா இளைஞருக்கு மரண தண்டனை!

இந்தியா

தென் கொரியாவின் K- Pop பாடல்களைக் கேட்ட 22 வயதான இளைஞரை வட கொரிய அரசு பொது வெளியில் தூக்கிலிட்டதாக தென் கொரியா அரசு பெரும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

அணு ஆயுத ஏவுகணை சோதனைகள், ராட்சத பலூன்களை தங்களின் எதிரி நாடுகளுக்கு அனுப்புவது, கடுமையான தண்டனைகளை வழங்குவது என அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளை அச்சுறுத்தி கவனம் ஈர்த்த நாடு வட கொரியா. குறிப்பாக அமெரிக்கா, தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு வட கொரியா பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. அதேபோல் அதிபர் கிம் ஜாங் உன்னின் அரசும் உள்நாட்டு மக்களுக்குக் கடும் கட்டுப்பாடுகளையும், தடைகளையும் விதிக்க தவறியதில்லை.

கடந்த ஆண்டுகூட, வட கொரியாவின் முன்னாள் அதிபர் கிம் ஜாங்-இலின் பத்தாவது நினைவு தினத்தில், 11 நாள்கள் துக்க அனுசரிப்பின் ஒரு பகுதியாக, வட கொரிய குடிமக்கள் சிரிக்கவோ, ஷாப்பிங் செய்யவோ, மது அருந்தவோ கூடாது. மீறினால் தண்டனை எனவும் கூறப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

இச்சூழலில் வட கொரியா நாட்டில் தகவல் மற்றும் பொழுதுபோக்குமீது கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளதுடன், அவற்றை மீறினால் கடுமையான தண்டனைகளையும் விதிக்கிறது. இந்த நிலையில், தென் கொரியாவின் K- Pop பாடல்களைக் கேட்ட 22 வயதான இளைஞரை வட கொரிய அரசு  பொது வெளியில் தூக்கிலிட்டதாக  தென் கொரியா அரசு பெரும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

தவறிழைத்ததாகக் கருதப்படும் 22 வயது இளைஞர், 70 தென் கொரிய கே பாப் பாடல்களைக் கேட்டதாகவும், மூன்று தென் கொரியப் படங்களைப் பார்த்தது மட்டுமல்லாமல், அவற்றை மற்றவர்களுக்கு விநியோகம் செய்ததாகவும்… இதன்மூலம் நாட்டின் சட்ட திட்டங்களை மீறியதாகக் கூறி, அந்த இளைஞனைக் குற்றவாளி எனக் கருதி அந்நாட்டு அரசு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது, சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது.

மேலும், 2022-ம் ஆண்டு நடந்த இந்த கொடூர சம்பவம், தற்போது தென் கொரியா வெளியிட்ட ‘வட கொரியாவின் மனித உரிமைகள் – 2024’ என்ற அறிக்கையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

“2020-ல் நிறைவேற்றப்பட்ட பிற்போக்குத்தனமான, தனிமனித சுதந்திரத்திற்கு எதிரான கலாசார சீரழிவுக்கு வழிவகுப்பதோடு, கடுமையான தண்டனைகளை வழங்கி மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூடப் பெறச்செய்யாமல் வட கொரியா செய்து கொண்டிருக்கிறது. மேலும், அந்நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் சட்டங்களை இயற்றி, வெளிநாட்டு கலாசாரத்தைப் பின்பற்றுவதற்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவிப்பதோடு, அப்படி வெளிநாட்டு கலாசாரத்தை பின்பற்றுபவர்களுக்கு மரண தண்டனை உட்பட கடுமையான தண்டனைகளை விதிக்கின்றனர்.

மேற்கூறிய செயல்பாடுகளின் மூலம் வெளிநாட்டு கலாசார தாக்கங்களைக் குறைக்க இயலும் என்றும், கலாசார நுகர்வு, நாட்டின் கலாசாரத்தை பராமரிக்க வேண்டும் என்கிற நோக்கமே இத்தகைய கட்டுப்பாடுகளுக்குக் காரணம்” என வட கொரியா மீது குற்றம்சாட்டப்படுகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், இதே போன்ற குற்றத்திற்காக இரண்டு இளைஞர்களுக்குத் தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பான வீடியோ ஆதாரம் வெளியாகி, கலாசாரச் சட்டங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் தொடர்வதை உறுதிப்படுத்தியதோடு, உலக அளவில் பேசுபொருளாகியது குறிப்பிடத்தக்கது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: சருமப் பொலிவுக்கு நாம் உட்கொள்ளும் உணவுகளும் அவசியம்!

ஹெல்த் டிப்ஸ்: நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறீர்களா… கண்டுபிடிப்பது எப்படி?

டாப் 10 நியூஸ் : NDA நாடாளுமன்றக் கட்சிக் கூட்டம் முதல் வரலட்சுமி திருமணம் வரை!

கிச்சன் கீர்த்தனா : மெக்சிகன் சிக்கன் ஊத்தப்பம்

 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *