குஜராத் கலவரம் : 22 பேரை விடுதலை செய்தது நீதிமன்றம்

இந்தியா

கோத்ரா கலவரத்துக்குபின் நடந்த வன்முறையில் 2 குழந்தைகள் உள்பட சிறுபான்மையினத்தைச் சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 22 பேரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2002ம் ஆண்டு, பிப்ரவரி 27ம்தேதி குஜராத்தில் அயோத்திக்கு சென்றுவிட்டுவந்த கரசேவகர்கள் வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிக்கு தீ வைக்கப்பட்டது. இதில் 59 பேர் இறந்த நிலையில் மாநிலத்தில் மிகப்பெரிய கலவரம் வெடித்தது.

ரயில் எரிப்புக்கு பதிலடியாக கோத்ராவில் நடந்த வன்முறையில் சிறுபான்மையினர் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். கோத்ரா கலவரத்தைத் தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் மதரீதியான மோதல்கள் நடந்தன.

அதில் பஞ்சமால் மாவட்டத்திலுள்ள திலோல் எனும் கிராமத்தில் சிறுபான்மை சமூகத்தைச்சேர்ந்த 2 குழந்தைகள் உள்ளிட்ட 17 பேர் கொல்லப்பட்டனர்.

பின்னர் இறந்தவர்களின் உடல்களையும் கலவரத்தில் ஈடுபட்ட கும்பல் தீயிட்டு எரித்தது. இதுதொடர்பாக 22 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கு பஞ்சமால் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று நடைபெற்ற விசாரணையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வழக்கறிஞர் கோபால் சின் சோலங்கி ஆஜராகி வாதாடினார்.

அவர் கூறுகையில், “குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக ஆதாரங்களை அளிக்க அரசு தரப்பு தவறிவிட்டது.

கலவரம் நடந்தபின் 2 ஆண்டுகளுக்குப்பின் வழக்கு தொடர்பாக 22 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 8 பேர் விசாரணையின்போதே இறந்துவிட்டனர்.

கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் இதுவரை கிடைக்கவில்லை. அதற்கான சாட்சிகளும் இல்லை. அப்படியிருக்க, எப்படி 22 பேரையும் குற்றவாளிகள் என்று கூறமுடியும்?” என்று வாதிட்டார்.

அதற்கு போலீசார் தரப்பில், திலோல் கிராம ஆற்றின் கரையில் இருந்து எலும்புகளை போலீசார் மீட்டனர்.

ஆனால் அவை இறந்தவர்களின் அடையாளத்தை கண்டறிய முடியாத அளவுக்கு எரிந்து இருந்தது. இந்த வழக்கில் சாட்சியாக இருந்த இறந்தவர்களின் உடல்களை அழிக்கும் நோக்கத்துடன் அவை எரிக்கப்பட்டது என்று வாதிட்டனர்.

போலீஸ் தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த கூடுதல் செசன்ஸ் நீதிபதி ஹர்ஸ் திரிவேதி, குற்றம்சாட்டப்பட்ட 22 பேருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் அனைவரையும் விடுதலை செய்வதாக உத்தரவிட்டார்.

கிறிஸ்டோபர் ஜெமா

ஆஸ்திரேலியா ஓபன் : இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சானியா – போபண்ணா ஜோடி!

புகையிலைப் பொருட்களுக்கு எதிரான தடை ரத்து : உயர்நீதிமன்றம்

+1
0
+1
0
+1
1
+1
0
+1
7
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *