உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் 2023 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறந்தது.
2022 ஆம் ஆண்டின் கடைசி நாளான இன்று (டிசம்பர் 31) மக்கள் அனைவரும் காத்திருப்பது நாளை (ஜனவரி 1) பிறக்கவிருக்கும் புத்தாண்டைக் கொண்டாடுவதற்குத் தான்.
பட்டாசுகள், இனிப்புகளுடன் மணி எப்போது 12 ஆகும் என்று சிலர் கடிகாரத்தையே பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.
இந்தியாவில் புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில் உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து நாட்டில் 2023 ஆண்டு புத்தாண்டு பிறந்தது.
இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்குப் பிறந்த 2023 ஆம் ஆண்டு புத்தாண்டை ஆக்லாந்து நாட்டு மக்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
ஆக்லாந்து நாட்டை சேர்ந்த மக்கள் தங்களது வாழ்த்துகளை சமூக வலைத்தளங்கள் வாயிலாக அனைவருக்கும் தெரிவித்து வருகின்றனர்.
மோனிஷா