2023-24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாழ்த்தப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (பிப்ரவரி 1) 2023-24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
அதில், தனிநபர் வரி திட்டத்தின் கீழ், இதுவரை ஆண்டுக்கு 5 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் வரி செலுத்தி வந்த நிலையில், ஆண்டுக்கு 7 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் வரி செலுத்தத் தேவையில்லை என்று அறிவித்தார்.
நாட்டில் அடுத்த நிதியாண்டுக்கான விவசாயக் கடன் இலக்கை மத்திய அரசு ரூ.20 லட்சம் கோடியாக உயர்த்தி நிர்ணயித்துள்ளதாகத் தெரிவித்தார்.
இதன் மூலம், கால்நடை, பால்வளம், மீன்வளத்துறை போன்றவை பயன்பெறும் என்று உரையில் குறிப்பிட்டிருந்தார்.
பழங்குடியினருக்குப் பாதுகாப்பான வீடுகள், சுகாதாரம், குடிநீர் மற்றும் மின்சாரம் ஆகியவற்றிற்காக அரசாங்கம் ₹ 15,000 கோடி செலவழிக்கும் எனவும் அறிவித்தார்.
தொடர்ந்து பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளையும் அறிவித்தார்.
மத்திய பட்ஜெட் தாக்கல் குறித்துப் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ”நாடு பொதுத்தேர்தலை எதிர்கொள்வதற்கு முன்பு 2023 ஆம் ஆண்டு பட்ஜெட் வலுவான பொருளாதாரத்திற்கு அடித்தளம் அமைக்கும்.
இந்த பட்ஜெட் ஏழைகள், கிராம மக்கள், விவசாயிகள் மற்றும் நடுத்தர மக்களின் கனவுகளை நிறைவேற்றும். அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் உள்ளது. நடுத்தர வர்க்கத்தினரை மேம்படுத்தவும், வாழ்க்கையை எளிதாக்கவும் நமது அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது பாராட்டிற்குரியது. பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்படுவதன் மூலம் அவர்கள் சுயமுன்னேற்றம் அடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட்டில் தொழில்நுட்பம் மற்றும் புதிய பொருளாதாரத்தில் கவனம் செலுத்தியுள்ளோம்” என்று பேசினார்.
மோனிஷா
காத்திருந்து காத்திருந்து… பாஜக இல்லாத புதிய கூட்டணி அமைத்த எடப்பாடி
காற்றழுத்த தாழ்வு மண்டலம்: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
பட்ஜெட்டில் அறிவித்துள்ள 50 புதிய விமான நிலையம் அமைப்பது ஏழைகளுக்கானது தான் மோடி அவர்களே