20000 fine for Using Single use plastic

பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் ரூ.20,000 அபராதம்!

இந்தியா

அமெரிக்காவில் உள்ள உணவகங்களில் பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் ரூ.20,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஆண்டுதோறும் 32 கோடி டன்கள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. இதில் 95 சதவிகிதம் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் குப்பைகள் என நுகர்வோர் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு கமிட்டியின் அறிக்கை கூறுகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான நியூயார்க்கில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஹோட்டல்கள் மற்றும் உணவு விநியோக நிறுவனங்களில் பிளாஸ்டிக் டப்பாக்கள், கரண்டி மற்றும் கத்திகள் போன்றவற்றை வாடிக்கையாளர் கேட்காமல் வழங்கக்கூடாது.

இதை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.20,000 வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் குப்பைகளைக் குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் கூறியுள்ளார்.

ராஜ்

கிச்சன் கீர்த்தனா: கீரை வெஜ் ஆம்லெட்

சிறப்பு விசாரணை குழு வேண்டும்: சென்னையில் மணிப்பூர் மக்கள் ஆர்ப்பாட்டம்!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *