வங்கிகளில் ரூ.2000 நோட்டை மாற்ற இன்றே கடைசி நாள்!

Published On:

| By Selvam

2000 notes exchange date

ரூ.2000 நோட்டுக்களை மாற்றுவதற்கான கால அவகாசம் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்ட நிலையில் இன்றுடன் (அக்டோபர் 7) காலக்கெடு முடிவடைகிறது.

2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது அவசர தேவைக்காக ரூ.2000 நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. மற்ற ரூபாய் நோட்டுக்கள் போதுமான அளவு புழக்கத்திற்கு வந்ததால் 2018-19 நிதியாண்டில் ரூ.2000 நோட்டு அச்சடிப்பு நிறுத்தப்பட்டது.

இந்தநிலையில் புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுக்களை திரும்ப பெறுவதாக மே 19-ஆம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. இருப்பினும் ரூ.2000 நோட்டுக்களை செப்டம்பர் 30-ஆம் தேதி வரை  வங்கிகளில் செலுத்தி அதற்கு மாற்றாக ரூ.500, ரூ.200, ரூ.100 பெற்றுக்கொள்ளலாம் என்றும் கடைகள், வணிக வளாகங்களில் ரூ.2000 நோட்டுக்களை வாடிக்கையாளர்களிடம் பெற வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியிருந்தது.

இதனால் பொதுமக்கள் தங்களிடமிருந்த ரூ.2000 நோட்டுக்களை வங்கிகளில் செலுத்தி மாற்று ரூபாய் நோட்டுக்களை பெற்று வந்தனர். ரிசர்வ் வங்கி கடந்த மாதம் வெளியிட்ட அறிவிப்பில் 93 சதவிகித ரூ.2000 நோட்டுக்கள் திரும்ப பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் ரூ.2000 நோட்டுக்கள் மாற்றுவதற்கான காலக்கெடு செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. பொதுமக்கள் வசதிக்காக ரூ.2000 நோட்டுக்களை மாற்றுவதற்காக ஒரு வாரம் ரிசர்வ் வங்கி கால அவகாசம் வழங்கியது.

இந்தநிலையில் இன்றுடன் ரூ.2000 நோட்டுக்களை மாற்றுவதற்கான காலக்கெடு நிறைவடைகிறது. பொதுமக்கள் தங்களிடமுள்ள ரூ.2000 நோட்டுக்களை அருகிலுள்ள வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: ஓட்ஸ் கோதுமை தோசை

சுப்மன் கில் உடல்நிலை: ராகுல் டிராவிட் முக்கிய தகவல்!

விடாமுயற்சி படத்தில் ரெஜினா: விலகிய வலிமை நடிகை..!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel