வீரமரணமடைந்த தமிழக வீரர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம்!

இந்தியா

காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணனுக்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராஜோரி பகுதியில் இன்று தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமணன் உட்பட மூன்று இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்.

டி. புதுப்பட்டியைச் சேர்ந்த ரைபிள்மேன் லட்சுமணன் உயிரிழந்தது தமிழக மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலை விமான மூலம் சொந்த ஊருக்கு எடுத்து வருவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

நாளை காலை சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலிக்குப் பின்னர் உடல் அடக்கம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் மரணம் அடைந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

பிரியா

எரிவாயு குழாய் வெடிப்பு : நூலிழையில் தப்பிய மக்கள்!

+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.