கேரள மாநிலம் பத்தனம்திட்டாவை சேர்ந்த அனுவுக்கும் நிகிலுக்கும் கடந்த நவம்பர் 30 ஆம் தேதி திருமணம் நடந்தது. இந்த தம்பதி திருமணத்துக்கு பிறகு தேன்நிலவுக்காக மலேசியாவுக்கு சென்றனர். தேனிலவு முடிந்து டிசம்பர் 16 ஆம் தேதி கேரளா திரும்பினர்.
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து அனு, நிகில் மற்றும் அனுவின் தந்தை பிஜு பி. ஜார்ஜ் , நிகிலின் தாயார் மதாய் ஆகியோர் காரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
புனலூர் – மூவாப்புழா சாலையில் கார் சென்று கொண்டிருக்கும் போது, ஆந்திராவில் இருந்து சபரிமலைக்கு சென்று கொண்டிருந்த பஸ் மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே புது மண தம்பதி மற்றும் மதாய், பிஜு பி.ஜார்ஜ் ஆகியோர் பலியானார்கள். திருமணம் முடிந்த 20 நாட்களில் புதுமண தம்பதி விபத்தில் சிக்கி இறந்தது அந்த பகுதியை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது.
புது மண தம்பதியின் உடலை பார்த்து உறவினர்கள் கதறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், புது மண தம்பதிக்கு எந்த ஆலயத்தில் திருமணம் நடைபெற்றதோ, அதே ஆலயத்தில் இறுதிச்சடங்குகள் நேற்று நடைபெற்றது. பின்னர், ஒரே குழியில் ஒன்றாக புதைக்கப்பட்டனர். இந்த காட்சியை கண்டு உறவினர்கள் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
கடந்த 8 ஆண்டுகளாக நிகிலும், அனுவும் காதலித்து வந்தனர். பெற்றோர் சம்மதத்துடன் கடந்த நவம்பர் 30 ஆம் தேதி திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. தொடர்ந்து, மலேசியாவிலுள்ள உறவினர் அழைப்பின் பேரில் அங்கு சென்றுள்ளனர். தேனிலவு கொண்டாடிவிட்டு மனமகிழ்ச்சியுடன் சொந்த ஊர் திரும்பினர். வீட்டுக்கு சென்றடைய 7 கிலோமீட்டர் தொலைவே இருக்கும் போது, விபத்தில் சிக்கி உயிரை இழந்தனர்.
வாழக்கையில் எதுவும் நிரந்தரமில்லை என்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
அம்பேத்கர் குறித்து சர்ச்சை பேச்சு… அமித்ஷாவுக்கு விஜய் கண்டனம்!
‘சாகித்ய அகாடமி விருது… வ.உ.சி தான் காரணம்’ : ஆ.இரா.வேங்கடாசலபதி மகிழ்ச்சி!