முதுகலை மருத்துவ நுழைவுத்தேர்வில் மோசடி செய்தது தொடர்பாக இரண்டு எய்ம்ஸ் மருத்துவர்கள் உட்பட ஐந்து பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
எம்.டி., எம்.எஸ் மற்றும் எம்.டி.எஸ் உள்ளிட்ட முதுகலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு எய்ம்ஸ் நிர்வாகத்தால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (INICET) நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தத் தேர்வில் மோசடி செய்ததாக இரண்டு எய்ம்ஸ் மருத்துவர்கள் உட்பட ஐந்து பேரை டேராடூன் போலீஸார் கைது செய்துள்ளனர்.
அரியானாவைச் சேர்ந்த டாக்டர் அஜித் சிங்(44), பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் வைபவ் காஷ்யப் (23), அரியானாவைச் சேர்ந்த அமன் சிவாச் (24), விபுல் கவுரா (31) மற்றும் ஜெயந்த் (22) ஆகிய ஐந்து பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இமாச்சல பிரதேச மாநிலம் காங்க்ரா பகுதியில் தேர்வு எழுதிய மூன்று தேர்வர்கள், வினாத்தாளை செல்போன் மூலம் புகைப்படம் எடுத்து அதை டாக்டர் வைபவ் காஷ்யப் மற்றும் டாக்டர் அஜித் சிங்கிற்கு அனுப்பியதாகவும், அவர்கள் அதற்கான பதில்களை அனுப்பி வைத்ததாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தேர்வு முடிந்தவுடன் ரூ.25 லட்சம் வழங்கப்பட்ட நிலையில், முடிவுகள் வெளிவந்த பிறகு மீதி ரூ.25 லட்சத்தை பெறுவதற்கு இவர்கள் தயாராக இருந்தனர் என்றும் போலீஸார் கூறியுள்ளனர். இந்த கைது நடவடிக்கையைத் தொடர்ந்து அவர்கள் பயன்படுத்திய டாப்லெட்ஸ், செல்போன்கள், இரண்டு மருத்துவப் பாடப் புத்தகங்கள் மற்றும் ஒரு காரையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: மாறிவரும் பருவநிலைக்கேற்ப உங்களை அழகாக்கிக் கொள்வது எப்படி?
கிச்சன் கீர்த்தனா: வேர்கடலை லட்டு!
ஆட்டத்துக்கு நாங்களும் வரலாமா? அப்டேட் குமாரு
அண்ணாமலை – சவுக்கு சங்கர் டெலிபோன் உரையாடல்: காங்கிரஸ் புகார்!