19,000 பேரை பணி நீக்கம் செய்யும் அக்செஞ்சர்!

இந்தியா

தங்கள் நிறுவனத்தில் 19 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அக்செஞ்சர் நிறுவனம் இன்று(மார்ச் 23) அறிவித்துள்ளது.

உலக பொருளாதார மந்தநிலை எச்சரிக்கைக்கு மத்தியில் தொழில்நுட்ப வரவு செலவுத் திட்டங்களைக் குறைக்கும் நடவடிக்கையில் பிரபல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

கூகுள், மைக்ரோசாப்ட், மெட்டா, அமேசான் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் பணிநீக்க நடவடிக்கையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் ஆண்டு வருவாய் வளர்ச்சி 8% முதல் 11% வரை இருந்த நிலையில் தற்போது 8% முதல் 10% வரை இருக்கும் என்று அக்செஞ்சர் நிறுவனம் எதிர்பார்க்கிறது.

அந்நிறுவனத்தின் ஒரு பங்கின் வருவாய் 11.20 முதல் 11.52 அமெரிக்க டாலர் வரை இருந்த நிலையில் 10.84 முதல் 11.06 வரை அமெரிக்க டாலர் வரை குறையும் என்று கணித்துள்ளது.

அதன் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக தனது வருடாந்திர வருவாய் வளர்ச்சி மற்றும் லாப கணிப்புகளை அந்நிறுவனம் குறைத்துள்ளது.

மேலும் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் 19 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாகவும் அக்செஞ்சர் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

ராகுலுக்கு சிறை தண்டனை: கர்நாடக தேர்தல் களத்தில் திருப்பம்!

ஆர்.என்.ரவி – அமித் ஷா திடீர் சந்திப்பு!

+1
0
+1
0
+1
1
+1
3
+1
0
+1
0
+1
1

2 thoughts on “19,000 பேரை பணி நீக்கம் செய்யும் அக்செஞ்சர்!

  1. பொதுவாக எல்லோரும் 3 மூன்று ஆண்டுகளில் 0% நீக்கிவிடுவார்கள். 30% பெரும்பாலோர் பயன்ற்றவர்களே. குறிப்பாக இந்தியாவில் த.தொ. துறையில் 100க்கு 3 பேர்தான் பொறியாளர்கள் (IT Engineers) மீதி செங்கல் அடுக்கிகளே.( brick layers). அவர்கள் அனுப்பப்படுகிறார்கள்.

    1. மன்னிக்கவும் “30% நீக்கிவிடுவார்கள்” என்று இருக்கவேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *