வடக்கு சிக்கிமில் ஏற்பட்ட ராணுவ வாகன விபத்தில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
வடக்கு சிக்கிம் ஜெமா என்ற இடத்தில் ராணுவ வாகனம், வளைவில் திரும்பியபோது செங்குத்தான சரிவில் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 16 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர்.

விபத்தில் சிக்கிய 4 வீரர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து வேதனை அளிப்பதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், “வடக்கு சிக்கிமில் நடந்த சாலை விபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது.
அவர்களின் சேவை மற்றும் அர்ப்பணிப்புக்காகத் தேசம் ஆழ்ந்த நன்றியுடன் இருக்கும். உயிரிழந்த குடும்பங்களுக்கு எனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மோனிஷா