இந்தியாவில் 150 மில்லியன் பேருக்கு மனநல பாதிப்பு!

இந்தியா

நாடு முழுவதும் சுமார் 150 மில்லியன் இந்தியர்கள் சில வகையான மனநலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என நிம்ஹான்ஸ் (NIMHANS) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

மனநலச் சிகிச்சை மட்டுமல்லாது, மனநலக் கல்வியிலும், மனநலம் தொடர்பான ஆய்வுகளிலும் இந்தியாவின் தலைசிறந்த நிறுவனமாக விளங்கிவருகிறது நிம்ஹான்ஸ் (NIMHANS).

இந்நிறுவனம், நாடு முழுவதும் மனநலம் குறித்து நடத்திய ஆய்வில், சுமார் 150 மில்லியன் இந்தியர்கள் சில வகையான மனநலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதில், 30 மில்லியன் மக்களே அதற்கான சிகிச்சையைப் பெறுகின்றனர். 10% க்கும் அதிகமான மக்களுக்கு அவர்களுடைய மனநலம் குறித்த வியாதிகளைக் கண்டுபிடிக்க முடிகிறது” என அதில் தெரிவித்துள்ளது.

ஒரு குறிப்பிட்ட மனநலக் கோளாறு காரணமாக உடல் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டையும் பாதிக்கும் மனநோய் போன்ற பிரச்சினைகளில் இந்த ஆய்வறிக்கை கவனம் செலுத்துகிறது” என்று தெரிவித்துள்ளது.

ஆகையால், ”இது மிகவும் கவலைக்குரிய விஷயம். ஆய்வறிக்கையின்படி, மனநலம் என்பது மிக முக்கியமானது. மனநல கோளாறுகளுக்கு சிகிச்சை பெறுவது அவசியமானது என நிம்ஹான்ஸ் இயக்குநர் பிரதிமா மூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஜெ.பிரகாஷ்

சிறைத் துறை டிஜிபியாக அம்ரேஷ் பூஜாரி நியமனம்!

செந்தில்பாலாஜி மீதான பணமோசடி வழக்கு : நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *