தனது 14 வயது மனைவியை பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதித்த 17 வயது சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 14வயது சிறுமியை பிரசவத்துக்காக 17 வயதான சிறுவன் நேற்று சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்க அழைத்து வந்துள்ளார்.
இதுகுறித்து விசாரித்த மருத்துவமனை செவிலியர்கள், சமூகநலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து மருத்துவமனை வந்த புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீசார் சிறுவனிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, 14 வயது சிறுமிக்கும், 17வயது சிறுவனுக்கும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.
அந்த சிறுவன் சென்னையில் வேலை செய்து வருவதால், திருமணம் முடிந்ததும் மனைவியை சென்னைக்கு அழைத்து வந்துள்ளார். தற்போது பிரசவத்திற்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்து இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து சிறுவன் மீது புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
’தமிழக அரசுக்கு எதிராக போராட வேண்டியிருக்கும்’ : திமுகவுக்கு சிபிஎம் தலைவர்கள் எச்சரிக்கை!
புத்தாண்டில் முதன்முறையாக குறைந்த தங்கம் விலை!
பொங்கல் விடுமுறை : சிறப்பு ரயில்களை அறிவித்த தெற்கு ரயில்வே!
கழிவு நீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி : பள்ளித் தாளாளர் உட்பட 3 பேர் கைது!