2019 மற்றும் 2021-க்கு இடைப்பட்ட மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் 13.13 லட்சம் சிறுமிகள் மற்றும் பெண்கள் காணாமல் போனதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.
தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் (National Crime Records Bureau – NCRB), இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்கள் ஆகியவற்றால் வரையறுக்கப்பட்ட குற்றப் புள்ளிவிவரங்களை சேகரித்து வெளியிடுகிறது.
அதன்படி தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அண்மையில் ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
நம் நாட்டில் பல்வேறு காரணங்களுக்காக பெண்கள் காணாமல் போவது அதிகரித்து வருகிறது. கடந்த, 2019-21ஆம் ஆண்டுகளில் மட்டும் நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட 10.61 லட்சம் பெண்கள் காணாமல் போயுள்ளனர்.
இதில் 2021 ஆண்டில் மட்டும் 3.75 லட்சம் பெண்கள் மாயமாகி உள்ளனர். இந்த காலகட்டத்தில் 18 வயதுக்கும் கீழ் உள்ள 2.52 லட்சம் சிறுமியர் காணாமல் போயுள்ளனர்.
இவற்றில் மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் பெண்கள் காணாமல் போயுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூனியன் பிரதேசங்களில் தலைநகர் டெல்லியில் தான் அதிக அளவில் பெண்களும் சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், சட்டம் – ஒழுங்கைப் பேணி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்காமல் தடுக்க வேண்டியது, குற்றங்களை விசாரித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டியது ஆகியன மாநில அரசுகளின் பொறுப்பு என்று குறிப்பிட்டுள்ளது.
பெரும்பாலும் பெண்கள், பெண் பிள்ளைகள் காணாமல் போவதென்பது ஆள் கடத்தல் கும்பல்களாலேயே நடைபெறுகிறது.
அவர்கள் அந்தப் பெண்களை பாலியல் தொழில் கும்பலிடம் விற்றுவிடுவதே பெரும்பாலும் நடைபெறுகிறது. இதனாலேயே பெண்கள் அதிக அளவில் காணாமல் போகின்றனர்.
நாடு முழுவதும் உள்ள பாலியல் குற்றவாளிகளை சட்ட அமலாக்க அமைப்புகளால் விசாரிக்கவும் கண்காணிக்கவும் வசதியாக 2018 செப்டம்பர் 20 அன்று உள்துறை அமைச்சகம் பாலியல் குற்றவாளிகள் குறித்த தேசிய தரவுத்தளத்தை அறிமுகப்படுத்தியது.
ஆனாலும் பெண்கள் காணாமல் போவது அதிகரித்தே வருகிறது.
ராஜ்
“ஓபிஎஸ், டிடிவி சாதி அரசியல் செய்கின்றனர்” – திண்டுக்கல் சீனிவாசன்
டிஜிட்டல் திண்ணை: பாதயாத்திரையில் வெளுத்த அண்ணாமலை சாயம்!
தென் மாவட்ட திமுகவில் சாதி மோதல் அபாயம்: ஸ்டாலினிடம் எச்சரித்த நிர்வாகிகள்!