இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,591 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கி கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா பரவல் நீடித்து வருகிறது. தொற்று பாதிப்பு நீடித்து வரும் அதே நேரத்தில் குறைவான பாதிப்பே பதிவாகியிருந்தது.
ஆனால் சில வாரங்களாக பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. பாதிப்பு அதிகரித்தாலும், தீவிரமாக இல்லை என்றும் இதனால் மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் மத்திய, மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,591 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,48,45,401-லிருந்து 4,48,57,992 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் இன்றைய நிலவரப்படி கொரோனா பாதிப்பிற்கு 65,286 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 40 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 6 பேரும் டெல்லியில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
இதனிடையே, திங்கட்கிழமை அன்று 9,111 மற்றும் செவ்வாய்க்கிழமை 7,633 ஆக பாதிப்பு குறைந்த நிலையில் நேற்றும் இன்றும் பாதிப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
ராகுல்காந்தி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!
தமிழ் பாடப்புத்தகத்தில் கருணாநிதி