12 years sentence for North Korean boys

தென் கொரியா சினிமாவைப் பார்த்த வட கொரியா சிறுவர்களுக்கு 12 வருட தண்டனை!

இந்தியா

வட கொரியாவில் தென் கொரியா நாடகங்களை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தென் கொரியா நாட்டின் பாப் இசை சினிமாவை பார்த்த சிறுவர்கள் இருவருக்கு 12 ஆண்டுகள் கடும் வேலை செய்யும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 16 வயதான அந்த சிறுவர்கள் தண்டிக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வட கொரியா மக்கள், தென் கொரியா மக்களுடன் எந்த வகையில் தொடர்பு ஏற்படுத்தினாலும் சொந்த நாட்டு மக்களுக்கே தண்டனை வழங்கும் கொடூரம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அந்நாட்டு அதிபராக இருக்கும் கிம் ஜோங் உன் உத்தரவில்தான் இது தொடர்வதாக கூறப்படுகிறது. வட கொரியாவில், தென் கொரியா நாடகங்களைப் பார்க்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையை மீறி தென் கொரியா நாட்டின் பாப் இசை சினிமாவை பார்த்த இரண்டு சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் கடும் வேலை செய்யும் தண்டனையை வட கொரியா அரசு வழங்கியுள்ளது. அந்த சிறுவர்கள் தண்டிக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக வட கொரியாவில் இருந்து வெளியேறி டோக்கியோ பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் பேராசிரியராக இருக்கும் முனைவர் சோய்க்யோங்ஹுய், “இதுபோன்ற கடுமையான தண்டனையை அளித்ததன் மூலம் ஒட்டுமொத்த வட கொரியா மக்களுக்கும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென் கொரிய கலாச்சாரம் வட கொரியாவில் ஊடுருவி வருவதை இது உறுதிப்படுத்துகிறது. அது கிம் ஜோங் உன் கட்டமைத்துள்ள வட கொரிய சிந்தனையை எதிர்ப்பதாக உள்ளது. அதனாலேயே அவர் இத்தகைய தண்டனைகளை அமல்படுத்துகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சண்டே ஸ்பெஷல்: தினமும் சூப் குடிப்பது நல்லதா, கெட்டதா?

ராஷ்மிகா மந்தனா Deep Fake வீடியோ… முக்கிய குற்றவாளி கைது!

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *