ரூ.12 லட்சம் கோடியைப் பயன்படுத்த முடியாமல் தவிக்கும் ரஷ்யா!

அரசியல் இந்தியா

உக்ரைன் – ரஷ்யப் போருக்குப் பிறகு தனக்குச் சொந்தமான 147 பில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் 12 லட்சம் கோடி ரூபாயை)ப் பயன்படுத்த முடியாமல் சிக்கலில் தவித்துவருகிறது ரஷ்யா.

நேட்டோ படையில் இணைவதற்கு உக்ரைன் முயற்சி மேற்கொண்டது. இதற்கு ரஷ்ய அதிபர் புதின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், தனது முடிவிலிருந்து உக்ரைன் பின்வாங்கவில்லை. இதையடுத்து, ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டார், புதின். கடந்த ஓராண்டுக்கு மேலாக நீடித்து வரும் இந்தப் போரினால், இரண்டு நாடுகளுக்கும் கடுமையான சேதம் ஏற்பட்டிருக்கிறது.

உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் கொண்டிருக்கின்றன. அவர்கள் உக்ரைனுக்கு ராணுவ உதவி செய்வதுடன், ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்திருக்கிறார்கள்.

இதனால் ‘சுவிஃப்ட்’ எனப்படும் சர்வதேச நாணய பரிமாற்றத்தை மேற்கொள்வதிலும் ரஷ்யாவுக்குச் சிக்கல் நீடிக்கிறது. அதன் காரணமாக பிற நாடுகளுடன் வர்த்தகம் செய்ய முடியாமல் அந்த நாடு பாதிப்பைச் சந்தித்து வருகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை ரஷ்யாவுடன் நீண்டகாலமாக நல்லுறவு பேணி வருகிறது. எனவே ரஷ்யா – உக்ரைன் போரில் அமைதியை விரும்புவதாக இந்தியா தெரிவித்துவிட்டது. ஆனால், இரு நாடுகளுக்குமிடையேயான வர்த்தகமும் முன்பைவிட கூடுதலாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

குறிப்பாக ரஷ்யாவிடமிருந்து சலுகை விலையில் அதிகப்படியான கச்சா எண்ணெயை, இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. ரஷ்யாவினால் டாலரில் வர்த்தகம் செய்ய முடியாது என்பதால், இந்தியாவின் ரூபாயிலேயே வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் ஒவ்வொரு மாதமும் ரஷ்யாவுக்கு வெளியே ஒரு பில்லியன் டாலர் தேங்குகிறது.

இதற்கு இந்தியாவிடமிருந்து ரஷ்யாவுக்கு ஏற்றுமதி மிகவும் குறைவாக இருப்பதே காரணம். எனவேதான் ஒவ்வொரு மாதமும் ரஷ்யாவுக்கு வெளியே ஒரு பில்லியன் டாலர் தேங்குகிறது. இது வரும் காலங்களில் மேலும் உயரும் என்கிறார்கள் சர்வதேசப் பொருளாதார நிபுணர்கள்.

ஒவ்வொரு காலாண்டும் 3 பில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் 24,000 கோடி ரூபாய் பயன்படுத்த முடியாத வகையில் தேங்கி வருகிறது. 2022-ல் ரூபாயில் வர்த்தகம் செய்யத் தொடங்கியது முதல் 147 பில்லியன் டாலர்… அதாவது 12 லட்சம் கோடி ரூபாய் ரஷ்யாவுக்கு வெளியே தேங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் சர்வதேசப் பொருளாதார நிபுணர்கள், “பல நாடுகளுக்கு கச்சா எண்ணெயை ரஷ்யாவால் விநியோகிக்க முடியவில்லை. எனவே, இந்தியாவுக்குச் சலுகை விலையில் அதிக அளவில் எண்ணெய் வர்த்தகம் செய்யப்படுகிறது.

ஆனால், இந்தியாவிலிருந்து அந்த நாட்டுக்கு ஏற்றுமதி மிகவும் குறைவாக இருக்கிறது. அதுதான் ரஷ்யாவின் பணம் அதிக அளவில் தேங்கியிருப்பதற்குக் காரணம். அதேநேரம் தன்னிடம் வர்த்தகத்தில் ஈடுபடும் உலக நாடுகளை, ரூபாயில் வர்த்தகம் செய்ய வைப்பதே இந்தியாவின் நோக்கமாக இருக்கிறது.

ஏற்றுமதி மூலம் ரூபாய் அதிகம் கிடைத்தால் அதை அரசுப் பத்திரங்கள், இந்தியப் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யலாம் என இந்தியா கூறுகிறது. இதன்படி இந்தியப் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்ய ரஷ்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

முதலில் ரஷ்யா இதற்கு ஆர்வம் காட்டவில்லை. ஆனால், தற்போது அதிக அளவில் அந்த நாட்டின் பணம் தேங்கியிருப்பதால், இந்தியப் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வது குறித்து ரஷ்யா தீவிரமாக ஆலோசித்து வருகிறது” என்கின்றனர்.

ராஜ்

டெல்லி தேசிய தலைநகர் பிரதேசம்: மாநிலமா? ஒன்றிய ஆட்சிப் பகுதியா?

ஜி-20 மாநாட்டுக்காக தரைமட்டமான ஏழை மாணவர்களின் பள்ளி!

12 lakh crore of Indian rupees Could not be used by Russia
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *