72 வயதில் சிறை… 104 வயதில் விடுதலை… யார் இந்த ரசிகத் மொண்டல்?

Published On:

| By Selvam

36 ஆண்டுகளுக்குப் பின்னர் மேற்கு வங்க மாநிலத்தின் மல்டா சிறையிலிருந்து 104 வயது முதியவர் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளது பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தின் மல்டா மாவட்டத்தை சேர்ந்த 104 வயதான ரசிகத் மொண்டல், கடந்த 1988-ம் ஆண்டு நிலத்தகராறில் தனது சகோதரரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், இவருக்கு கடந்த 1992-ம் ஆண்டு மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. இதைத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட இவர், 36 ஆண்டுகள் கழித்து கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தண்டனை காலத்தில் ஒருமுறை பிணையிலும் ஒருமுறை பரோலிலும் வெளியே வந்த இவர், பிணைக்காலம் முடிந்தவுடன் மீண்டும் சிறைக்கு சென்றார். மேலும் இதற்கு முந்தைய சந்தர்ப்பங்களில் இவரது விடுதலை மனுவை செஷன்ஸ் மற்றும் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தனது 72 வது வயதில் சிறைக்கு சென்றவர், தற்போது 104 வயதில் முழுவதுமாக விடுதலையாகியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், தான் ஒரு நிரபராதி எனவும் சூழ்நிலை கைதியாக தண்டனையை அனுபவித்ததாகவும், இனியுள்ள நாட்களை தனது வீட்டிலுள்ள சிறிய தோட்டத்தை பராமரிப்பதிலும் தனது குடும்பத்தினரோடு நேரம் செலவழிப்பதிலும் கழிக்கப்போவதாகக் கூறியுள்ளார்.

இந்த விடுதலை குறித்து பேசியுள்ள சிறை அதிகாரிகள், ”மேற்கு வங்க மாநிலத்தின் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 100 வயதுக்கும் மேற்பட்ட கைதிகளை கொண்ட மிகச் சில வழக்குகளில் இதுவும் ஒன்று” என்று தெரிவித்துள்ளனர்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: கொள்ளு இட்லி

பேச்சுவார்த்தையே கிடையாது – ‘தல’ தோனியுடன் ஹர்பஜன் சிங்குக்கு என்ன பிரச்னை?

அமரன் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய தடை கோரி வழக்கு!

கோவையில் 10 மாதத்தில் 1 லட்சம் வாகனங்கள் பதிவு… சாலைகள் அலறல்!

சிபில் ஸ்கோரில் வெளிப்படைத்தன்மை இல்லை : கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share