இஸ்ரேல் – ஹமாஸ் போர் 100-வது நாளாகத் தொடர்ந்து வருகிறது. போரில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 24,100 என்று காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக காஸா சுகாதார அமைச்சகம் நேற்று (ஜனவரி 15) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கடந்த 24 மணி நேரத்தில் காஸா மருத்துவமனைகளுக்கு தாக்குதலில் பலியான 132 பேரின் உடல்கள் கொண்டுவரப்பட்டது. காஸா பாதுகாப்பு குழுவின் உறுப்பினர்கள் 33 பேர் இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் பலியாகினர். மேலும் 252 காயமுற்றவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
மேலும், பொதுமக்கள் மற்றும் ஹமாஸ் போராளிகள் என அமைச்சகத்தால் பிரித்து சொல்லப்படவில்லை. ஆனால், போரில் ஏறத்தாழ 8,000 ஹமாஸ் போராளிகள் உயிரிழந்துள்ளனர். பாலஸ்தீனர்களின் பலி எண்ணிக்கை 24,100 ஆக உயர்ந்துள்ளது. 60,834 பேர் காயமுற்றுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
தைப்பூசத்துக்குத் தயாராகும் பழனி: எந்த நாளில் என்ன விசேஷம்?