எலெக்ட்ரிக் வாகனம் வாங்கினால் 100% வரி ரத்து: எங்கே தெரியுமா?

Published On:

| By christopher

எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்கினால் 100% சாலை வரி மற்றும் பதிவுச் செலவு எதுவுமே கிடையாது என்று தெலங்கானா மாநில அரசு அறிவித்திருக்கிறது.

காற்று மாசு காரணமாக டெல்லி, நொய்டா, மும்பை போன்ற மாநிலங்கள் வரிசையில் தெலங்கானா வந்துவிடக் கூடாது என்பதில் மும்முரமாக இருக்கிறது அம்மாநில அரசு. இதைத் தொடர்ந்துதான் இந்தச் செய்தியை அறிவித்திருக்கிறது. தெலங்கானா மாநிலத்தின் போக்குவரத்துத் துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர், எலெக்ட்ரிக் வாகனச் சட்டத்தின் கீழ் இந்தப் புதிய GO (Government Order)-யை வெளியிட்டிருக்கிறார்.

எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், கார்கள், கமர்ஷியல் வாகனங்கள், முக்கியமாக டாக்ஸிகள், பேருந்துகள், எலெக்ட்ரிக் டிராக்டர்கள் போன்ற எல்லாவற்றுக்கும் இந்த விதி பொருந்தும். மாநிலம் சார்பாக ஓடும் அரசு எலெக்ட்ரிக் பஸ்கள் அனைத்தும், அதன் வாழ்நாள் முழுவதும் சாலை வரி கட்டத் தேவையில்லை.

இதுவே பொது நிறுவனங்கள், தனியார் கம்பெனிகள் பெயரில் இயங்கும் எலெக்ட்ரிக் கமர்ஷியல் வாகனங்களுக்கு, இந்த வரித் தளர்வு 2026-ம் ஆண்டு டிசம்பர் 31 வரை பொருந்தும். அதன் பிறகு இது நீட்டிக்கப்படுமா என்பதை அரசு இனிமேல் அறிவிக்கும்.

இதற்கு முன்பு தெலங்கானாவில் சாலை வரியாக, வாகனங்களைப் பொறுத்து 9% முதல் 12% வரை வரியாக வசூலிக்கப்பட்டு வந்தது. அதேபோல் பதிவுக் கட்டணத்தைப் பொறுத்தவரை பைக் என்றால் சுமார் 550 முதல் 650 ரூபாயும், கார் என்றால், 1,500 ரூபாய் வரையிலும் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இனி இந்தச் செலவு எலெக்ட்ரிக் வாகனங்களில் இல்லை. தெலங்கானா அரசின் இந்தத் திட்டத்தால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: ஸ்பைஸி இறால் புரொக்கோலி இட்லி உப்புமா

ஐபிஎல் ஏல பரிதாபங்கள் : அப்டேட் குமாரு

ராமதாஸை இன்சல்ட் செய்த ஸ்டாலின்… ’வேலை’யைக் காட்ட பாமக திட்டம்!

விடிய விடிய குடி காலையில் பலி… 60 வயதுக்காரருடன் தங்கிய 27 வயது இளம் பெண் இறந்த பின்னணி!

பத்திரிகைகளின் மரணம்?