10 ஆயிரம் மின்சார பேருந்துகளை இயக்க மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் இன்று (ஆகஸ்ட் 16) டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள், திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு மத்திய அமைச்சர்கள் அனுராக் தாகூர் மற்றும் அஸ்வினி வைஷ்ணவ் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார்கள். அப்போது மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், ”பிரதம மந்திரி இ-பஸ் சேவை திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு 57 ஆயிரத்து 613 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. இந்த திட்டத்தை தனியாருடன் இணைந்து செயல்படுத்த உள்ளோம். இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 10 ஆயிரம் புதிய மின்சார பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
மொத்தமுள்ள 57 ஆயிரத்து 613 கோடி ரூபாய் நிதியில் 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு வழங்கும். 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் மின்சார பேருந்து திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
நகரப் பேருந்து சேவையில் சுமார் 10,000 பேருந்துகளை ஈடுபடுத்துவதன் மூலம் 45,000 முதல் 55,000 நேரடி வேலைவாய்ப்புகளை உருவாகும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், “கைவினை பொருட்களின் உற்பத்தியை ஊக்கப்படுத்தும் வகையில் பிரதம மந்திரியின் விஸ்வர்மா திட்டத்தின் கீழ் கைவினை கலைஞர்களுக்கு 5 சதவிகித வட்டியில் 1 லட்ச ரூபாய் வரை கடன் உதவி வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக அமைச்சரவை 13 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது” என்று தெரிவித்தார்.
மோனிஷா
டி.எம்.சௌந்தரராஜன் சிலையை திறந்து வைத்தார் முதல்வர்
செ பாலாஜி வழக்கு! அரசே அஞ்சும் அதிகாரி நாகஜோதி அதிர வைக்கும் தகவல்கள்!