விவசாயிகளுக்கு 1.5 சதவீதம் வட்டி மானியம் அளிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக ரிசர்வ் வங்கி தொடர்ச்சியாக வட்டி விகிதங்களை அதிகரித்து வந்தது.
அண்மையில் 5.4 சதவீதமாக ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது. இந்தநிலையில் விவசாயிகளுக்கு பயன்தரும் வகையில் வட்டியில் மானியம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி 1.5 சதவீதம் வட்டி மானியம் அளிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
இதனால் விவசாயிகளுக்கு குறைவான வட்டியில் கடன் கிடைக்கும். ரூ. 3 லட்சம் வரை கடன் வாங்கினால் 1.5 சதவீதம் வட்டி குறைவாக கிடைக்கும்.
வட்டி மானியத்துக்கென ரூ. 34, 856 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வட்டி மானியமானது மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு கிடைக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கலை.ரா
கடனுக்கான வட்டி விகிதம் உயர்வு: ஸ்டேட் வங்கியின் சுதந்திர தின பரிசு!