அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டார். இதனால், அந்த நாட்டின் லட்சக்கணக்கான பெண்கள் கோபமும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.
ஆணாதிக்க ஆண்களின் ஓட்டு காரணமாகவே டிரம்ப் வெற்றி பெற்றுள்ளதாக பலரும் கருதுகின்றனர். இதனால், 4 பி இயக்கத்தை பின்பற்ற முடிவு செய்துள்ளனர். காதல், திருமணம், குழந்தை பெற தடை, உடலுறவு என இந்த நான்கு விஷயங்களில் இருந்து ஆண்களிடத்தில் இருந்து விலகியிருத்தல் என்பதுதான் 4 பி இயக்கத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.
அப்படியென்றால், திருமணம் முடிந்திருந்தால் கணவருடன் மனைவி செக்ஸ் வைத்துக் கொள்ள மாட்டார்கள். திருமணம் முடியாத பெண்கள் ஆண்களுடன் நட்பு, லவ் என எந்தவிதமாக உறவையும் வைத்துக் கொள்ள மாட்டார்கள். தற்போது, டிரம்புக்கு ஒட்டு போட்ட ஆண்களை இந்த வகையில் தண்டிக்க அமெரிக்க பெண்கள் முடிவு செய்துள்ளனர்.
கமலா ஹாரீஸ் வெற்றி பெற்றால், அமெரிக்காவில் பெண்கள் தாங்கள் இழந்த உரிமைகளை மீண்டும் பெறலாம் என்று திட்டமிட்டிருந்தனர். ஆனால், அது நடக்காமல் போனதால் 4 பி இயக்கத்தை பின்பற்ற முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. பல அமெரிக்க பெண்கள் சமூகவலைத் தளத்தில் இது தொடர்பாக வெளிப்படையாக பேச தொடங்கியுள்ளனர். அமெரிக்காவில் ஏற்கனவே இந்த இயக்கம் பெரிதும் பரவி வருகிறது.
முதல்முறையாக 4 பி இயக்கம் தென்கொரியாவில் தொடங்கப்பட்டது. தென்கொரியாவில் பெண்களுக்கு எதிரான குடும்பவன்முறையால் 45 சதவிகித பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அலுவலகங்களில் ஆண்களை விட 31 சதவிகிதம் ஊதியம் குறைவு என பல ஆணாதிக்க சிந்தனை மேலோங்கியிருந்தது. இதையடுத்து , 2019 ஆம் ஆண்டு அங்கு பி4 இயக்கம் தொடங்கப்பட்டது.
இதனால், திருமணம் கட்டாமல் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் ஆண்களிடத்தில் இருந்து தென்கொரிய பெண்கள் முற்றிலும் விலக தொடங்கினர். நாளடைவில் தென்கொரியாவில் இருந்து அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கும் பி 4 இயக்கம் பரவ தொடங்கியது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
பாம்புக்கடி உயிரிழப்பை தடுக்க அரசு நடவடிக்கை!
’சூது கவ்வும் – 2’ : ரிலீஸ் எப்போ தெரியுமா..?