லேப்டாப், கணினி உள்ளிட்டவற்றின் இறக்குமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்திருக்கிறது. உரிய உரிமம் இல்லாமல் இவற்றை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது.
டெல், ஏசர், சாம்சங், பானாசோனிக், ஆப்பிள், லெனோவா மற்றும் ஹெச்பி ஆகிய மடிக்கணினிகள், கணினிகள் இந்திய சந்தையில் முக்கிய பங்காற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆகும்.
இந்நிலையில் லேப்டாப் இறக்குமதி தொடர்பாக முக்கிய அறிவிப்பை வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, HSN 8741 இன் கீழ் வரும் மடிக்கணினிகள், டேப்லெட்டுகள், ஆல்-இன்-ஒன் பர்சனல் கம்ப்யூட்டர்கள் மற்றும் அல்ட்ரா ஸ்மால் ஃபார்ம் ஃபேக்டர் கம்ப்யூட்டர்கள் மற்றும் சர்வர்கள் உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதி கட்டுப்படுத்தப்படுகிறது.
அதேசமயம் முறையான லைசன்ஸ் பெற்று இறக்குமதி செய்யலாம். அதற்கு வரி செலுத்த வேண்டும். தரப்படுத்துதல், மதிப்பீடு செய்தல், பழுதுபார்ப்பு, மறு ஏற்றுமதி மற்றும் தயாரிப்பு உள்ளிட்ட நோக்கங்களுக்காக தடை செய்யப்பட்ட பொருட்களில் குறிப்பிட்ட பொருட்களை மட்டும் இறக்குமதி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியாண்டில் ஏப்ரல் – ஜூன் வரையிலான காலகட்டத்தில், கணினிகள், மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் உள்ளிட்ட எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களின் இறக்குமதியின் மதிப்பு 19.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு உயர்ந்திருக்கிறது.
இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 6.25 சதவிகிதம் அதிகமாகும். இந்நிலையில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
அதேசமயம் நேற்று முன் தினம் ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோபுக் என்ற பெயரில் ரூ.16,499 என்ற குறைந்த விலையில் லேப்டாப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜியோ அறிவித்து ஓரிரு தினங்களில் மத்திய அரசு இப்படி ஒரு அறிவிப்பை விவாத பொருளாகியிருக்கிறது.
பிரதமர் மோடி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு குறிப்பாக அம்பானி, அதானிக்காக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், இன்று வெளியான அறிவிப்பை குறிப்பிட்டு நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
“ஆகஸ்ட் 1: ஜியோ நிறுவனம் ரூ.16,499க்கு ஜியோ புக்கை அறிமுகப்படுத்தியது.
ஆகஸ்ட் 3: மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் மற்றும் கணினிகளின் இறக்குமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது” என்று தேதியை குறிப்பிட்டு இது தற்செயலாக நடந்ததுதானா என கமெண்ட் செய்து வருகின்றனர்.
பிரியா
என்.எல்.சி முன் போராட அனுமதிக்க முடியாது: உயர்நீதிமன்றம்!
அஜயன் பாலா இயக்கும் மனதைத் தொடும் காதல் கதை!