ஒர்க் பிரஷ்ஷர்…ஆடிட்டரை நடுரோட்டில் தாக்கிய ஊழியர்கள்…பெங்களூரை அதிரவைத்த சம்பவம்

இந்தியா

பெங்களூரில் பணி நிமித்தமாக அழுத்தம் கொடுத்ததற்காக தனியார் நிறுவனத்தின் ஆடிட்டரை அவருக்கு கீழே பணிபுரியும் ஊழியர்கள் அடியாட்களை வைத்து தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரின் கல்யாண் நகர் அருகிலுள்ள ரிங் ரோடு பகுதியில் பட்டப்பகலில் இரும்புத் தடிகளைக் கொண்டு ஒருவர் தாக்கப்படும் காணொளி அந்த சாலையில் இருந்த ஒரு காரின் டேஷ்போர்ட் கேமராவில் பதிவாகி, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

_cavalier_fantome என்ற இன்ஸ்டாகிராம் ஐடியில் இந்த வீடியோ வெளியானது. அதை பதிவிட்ட நபர், தான் பெங்களூரின் கல்யாண் நகர் அருகில் சாலையில் பயணித்த போது இந்த கொடூரமான சம்பவம் நிகழ்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் Waseem என்பவர் தனது X பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டு பெங்களூர் காவல்துறையை டேக் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டிருந்தார்.

 

அதன் பிறகு தாக்கப்பட்ட நபரை சந்தித்து பெங்களூர் காவல்துறையினர் விசாரித்ததில், அவரது பெயர் சுரேஷ் என்பதும், அவர் ஒரு பால் தயாரிப்பு நிறுவனத்தில் ஆடிட்டராக பணிபுரிவதும் தெரிய வந்தது.

இந்த புகாரில் காவல்துறை 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தது. அவர்களில் இரண்டு பேர் சுரேஷ் பணிபுரியும் அதே நிறுவனத்தில் ஊழியர்களாக பணிபுரிபவர்கள் என்பது தெரியவந்தது.

உமாசங்கர், வினேஷ் ஆகிய அந்த இருவரையும் காவல்துறையினர் விசாரித்த போது, சுரேஷ் தங்கள் இருவரின் மீதும் வேலையில் அளவு கடந்த அழுத்தத்தைக் கொடுத்ததாக தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் நிறுவனத்தின் ஸ்டாக் பேலன்ஸ்களை அனைத்து ஊழியர்களும் உடனடியாக கிளியர் செய்ய வேண்டும் என்று அனைவரையும் மோசமாக நடத்தியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு நிறுவனத்தில் மேல் அதிகாரி பணி நிமித்தமாக அழுத்தம் கொடுத்ததற்கு, சாலையில் அடியாட்களை வைத்து அவரை இரும்பு ராடுகள் வைத்து ஊழியர்கள் தாக்கிய சம்பவம் அனைவரிடமும் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அலுவலகங்களில் பணி நிமித்தமாக உருவாக்கப்படும் அளவு கடந்த அழுத்தங்கள் குறித்தும் பல்வேறு விவாதங்களையும் இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பரப்புரையில் பட்டைய கெளப்பும் பாரதிய ஜனதா: திணறும் திமுக; அதல பாதாளத்தில் தவிக்கும் அதிமுக!

பரப்புரையில் பட்டைய கெளப்பும் பாரதிய ஜனதா: திணறும் திமுக; அதல பாதாளத்தில் தவிக்கும் அதிமுக!

தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை: நகை பிரியர்கள் ஷாக்!

+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *