பாகிஸ்தான் தாக்குதல் தொடர்பாக டெல்லியில் இன்று வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரோஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் செய்தியாளர்களை சந்தித்து விவரித்தனர். இந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட விவரங்களின் தொகுப்பு:
- பாகிஸ்தானின் அனைத்து தாக்குதல்களையும் இந்திய ராணுவம் முறியடித்துவிட்டது.
- பஞ்சாப் விமானப் படை தளத்தை தாக்க முயன்ற பாகிஸ்தானின் முயற்சி முறியடிக்கப்பட்டது.
- இந்தியாவின் 26 ராணுவ நிலைகளை இலக்கு வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சித்தது.
- பாகிஸ்தானுக்கு பதிலடி நடவடிக்கையாக அந்நாட்டின் ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்டப்பட்டது. பாகிஸ்தான் சியால்கோட் விமான படை தளத்தை இந்தியா தாக்கி தகர்த்தது; மேலும் பாகிஸ்தானின் 4 விமான படை தளங்களும் பாதிப்படைந்தன.
- சூரத் விமானப் படை தளத்தை தகர்த்ததாக பாகிஸ்தான் பொய்யான தகவலைப் பரப்புகிறது
- ஜம்மு காஷ்மீர், பஞ்சாப்பில் அப்பாவி பொதுமக்களை இலக்கு வைத்து தாக்குகிறது பாகிஸ்தான்.
- இருநாடுகளிடையே பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் ராணுவ நடவடிக்கைகளையே பாகிஸ்தான் மேற்கொண்டு வருகிறது
- இன்று அதிகாலையும் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்களை நடத்தியது.
- பாகிஸ்தான் டிரோன்கள், போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்துகிறது.
போர்க்களச் செய்திகள்

- ஜம்முவில் ஷம்பு கோவிலை இலக்கு வைத்து பாகிஸ்தான் டிரோன் தாக்குதலை நடத்தியது; மே 10-ந் தேதி இடைவிடாமல் டிரோன்கள் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டது; பொதுமக்களையும் வழிபாட்டுத் தலங்களையும் பாகிஸ்தான் தாக்கி வருகிறது; இந்தியாவின் இறையாண்மையை பாதுகாப்பதில் பாதுகாப்புப் படை உறுதியாக உள்ளது- பாதுகாப்பு அமைச்சகம்
- டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்பு
- குஜராத்தின் கட்ச் ராணுவ நிலையை நோக்கி ஏவப்பட்ட பாகிஸ்தான் டிரோன் அழிக்கப்பட்டது
- பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது என பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது
- பஞ்சாப் பதன்கோட் மீது ஏவப்பட்ட பாகிஸ்தான் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது.
- ராஜஸ்தானின் பார்மரில் பொதுமக்கள் வெளியே நடமாட வேண்டாம்; அனைவரும் பாதுகாப்பாக வீடுகளுக்கு உடனே செல்ல வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது
- பாகிஸ்தானால் தாக்கப்பட்ட ஜம்மு ரூப்நகர் ஷம்பு கோவில் பகுதியில் முதல்வர் உமர் அப்துல்லா ஆய்வு நடத்தினார்.
