ADVERTISEMENT

ஜூலை 8 டெட்லைன்… இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் புதிய ஒப்பந்தம்!

Published On:

| By Minnambalam Desk

India interim trade deal with US

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையில் ஜூலை 8-க்கு முன்னதாக இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள பரஸ்பர வரி விதிப்பான (Reciprocal Tariff) 26% இருந்து முழுமையாக விலக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் முக்கிய கோரிக்கை உள்ளது. India interim trade deal with US

ADVERTISEMENT

கடந்த ஏப்ரல் 2 அன்று, அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் மீது பரஸ்பர வரிவிதிப்பை அறிவித்தார்.

அதில் இந்தியாவிற்கு 26% வரியை விதித்தார். ஆனால், இதை 90 நாட்களுக்கு (ஜூலை 9 வரை) இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்தார்.

ADVERTISEMENT

இருப்பினும், ஏற்கனவே அமெரிக்கா விதித்துள்ள 10% அடிப்படை கட்டணம் (baseline tariff) தொடரும் நிலையில் உள்ளது. India interim trade deal with US

இந்த நிலையில் இந்தியா, தனது முக்கியமான விவசாயம் மற்றும் பால் உள்ளிட்ட சில துறைகளை பாதுகாப்பதற்காக, கொள்முதல் வரம்புகள் அல்லது குறைந்தபட்ச இறக்குமதி விலை (Minimum Import Price) போன்ற வரம்புகளை தொடர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ADVERTISEMENT

குறிப்பாக விவசாயம் மற்றும் பால் உள்ளிட்ட துறைகளில் கட்டற்ற வர்த்தகம் கொண்டு வந்தால் அது பல கோடிக்கணக்கான இந்திய மக்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். India interim trade deal with US

குறிப்பாக நியூசிலாந்து, லத்தின் அமெரிக்க நாடுகளில் இருந்து பால் பொருட்களின் விலை மலிவு விலையில் இருப்பதால் அது இந்திய சந்தைக்கு மிகப்பெரிய அளவில் இறக்குமதி ஆவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சமீபத்தில் வாஷிங்டனில் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேம்சன் க்ரியர் மற்றும் வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லட்‌னிக் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தியாவின் அதிகம் ஏற்றுமதி ஆகக்கூடிய துறைகளான ஜவுளி, தோல், ரத்தினங்கள், நகைகள், பிளாஸ்டிக், இறால், பழங்கள் போன்றவைகள் மீது அமெரிக்கா வரிச்சலுகை வழங்க வேண்டும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது.

அதே சமயம், அமெரிக்கா இயந்திரப் பொருட்கள், மின்சார வாகனங்கள், மதுபானங்கள், ரசாயனங்கள், பால் மற்றும் விவசாயப் பொருட்கள் போன்றவற்றிற்கு வரிச்சலுகைகளை எதிர்பார்க்கிறது.

2024-25 ஆண்டு தரவுகளின் படி அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் 11 லட்சம் கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைப்பெற்றுள்ளது.

இதனை வருகின்ற 2030க்குள் 42 லட்சம் கோடியாக அதிகரிக்க இலக்கு அமெரிக்கா நிர்ணயித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share