Asian Games 2023: 107 பதக்கங்களுடன் நிறைவு செய்த ‘இந்தியா’.. எந்த பிரிவில் எவ்வளவு?

Published On:

| By Kavi

India finished with 107 medals

சீனாவின் ஹாங்சோவில் நடைபெறும் 2023 ஆசிய போட்டிகள், இன்றுடன் நிறைவடைகிறது. இந்த தொடரின் நிறைவு விழா, இன்று (அக்டோபர் 8) மாலை 5:30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்த விளையாட்டு திருவிழாவில், இந்தியா 28 தங்கம், 38 வெள்ளி மற்றும் 41 வெண்கலம் என 107 பதக்கங்களுடன் நிறைவு செய்துள்ளது.

ஆசிய போட்டிகள் வரலாற்றில், பதக்கங்கள் அடிப்படையில், இந்தியாவின் மிகச்சிறந்த ஆசிய போட்டி இதுதான்.

எந்த பிரிவுகளில் எவ்வளவு பதக்கங்கள்?

India finished with 107 medals

இந்த 19வது ஆசிய போட்டிகளில், இந்திய அணியில் தடகள வீரர்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தியுள்ளனர். இந்த தொடரில், இந்தியாவுக்கு அதிகபட்சமாக 29 பதக்கங்கள் தடகள பிரிவு போட்டிகளில் இருந்தே கிடைத்துள்ளது.

இந்த விளையாட்டு பிரிவில், இந்திய வீரர், வீராங்கனைகள், 6 தங்கம், 14 வெள்ளி மற்றும் 9 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

தடகள விளையாட்டை அடுத்து, துப்பாக்கி சுடுதல் பிரிவில், இந்திய அணி 22 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. குறிப்பாக, இந்தியாவுக்கு அதிகபட்சமாக 7 தங்கப் பதக்கங்கள் இந்த பிரிவில் இருந்தே கிடைத்துள்ளது.

அதனுடன், 9 வெள்ளி மற்றும் 6 வெண்கலப் பதக்கங்களையும், இந்திய வீரர், வீராங்கனைகள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வென்றுள்ளனர்.

India finished with 107 medals

3வது இடத்தில் வில்வித்தை போட்டி உள்ளது. இந்த பிரிவில், இந்தியா 5 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.

மேலும், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் என இந்திய வீரர், வீராங்கனைகள் 9 விக்கெட்களை கைப்பற்றியுள்ளனர்.

மல்யுத்த போட்டிகளில், இந்தியா 1 வெள்ளி மற்றும் 5 வெண்கலம் என 6 பதக்கங்களை வென்றுள்ளது.

இந்த பிரிவுகளை தொடர்ந்து, ஸ்குவாஷ், ரோவிங் மற்றும் குத்துச்சண்டை என 3 பிரிவுகளிலும் இந்தியா தலா 5 பதக்கங்களை வென்றுள்ளது. குறிப்பாக, ஸ்குவாஷ் போட்டிகளில் 2 தங்கப் பதக்கங்களை வென்று இந்திய வீரர் வீராங்கனைகள் அசத்தியுள்ளனர்.

இவற்றுடன் கிரிக்கெட் மற்றும் கபடி என 2 போட்டிகளும், ஆடவர் மற்றும் மகளிர் என 2 பிரிவுகளும், இந்திய வீரர், வீராங்கனைகள் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளனர்.

India finished with 107 medals

மேலும், ஹாக்கியில் ஆடவர் அணி நடப்பு சாம்பியனை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தது. செஸ் விளையாட்டில், குழு பிரிவில், ஆடவர் & மகளிர் என 2 அணிகளுமே வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளனர்.

முரளி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்

அதிவேக சதம்.. அதிக ரன்கள்.. சாதனைகளை தகர்த்த தென் ஆப்பிரிக்கா

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் : 2000 பேர் பலி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share