இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஏற்பட்ட அவமானகரமான தோல்வியின் எதிரொலியாக இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா அணியில் இருந்து நீக்கப்பட்டார். india fast bowler Released From squad against eng
ஹெடிங்லியில் நடந்த இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 சதங்கள் உட்பட 835 ரன்கள் குவித்தது. எனினும் 5 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
இந்த தோல்விக்கு இந்திய அணி 4 பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியது ஒரு காரணமாக கூறப்பட்டது.
இதற்கிடையே கூடுதலாக இந்தியா ஏ அணிக்காக விளையாடி வரும் இளம் வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணாவை அணியில் சேர்த்தார் தலைமை பயிற்சியாளர் கம்பீர்.

இந்த முடிவு முன்னாள் வீரர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், ஜூலை 4 ஆம் தேதி பர்மிங்காமில் தொடங்கும் இரண்டாவது டெஸ்டுக்கான இந்திய அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து கோடையின் பெரும்பகுதியில் வறண்ட வானிலை நிலவும் என்பதால், இந்திய அணி நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும், வெளியே அமரவைக்கப்பட்டுள்ள சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட வேண்டுமெனவும் முன்னாள் வீரர்களான அஸ்வின், சஞ்சய் மஞ்ச்ரேக்கர், திலீப் வெங்சர்க்கார் ஆகியோர் தெரிவித்தனர்.
அதன்படி பர்மிங்காமில் ஷர்துலுக்குப் பதிலாக குல்தீப் யாதவ் களமிறங்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.