ஆப்பிரிக்காவில் கால் பதிக்கும் இந்தியா… தயாராகும் புதிய துறைமுகம்?

Published On:

| By Minnambalam Desk

India eyes global stage for ports

இந்தியா தனது துறைமுக உள்கட்டமைப்பு மற்றும் மேலாண்மை திறன்களை உலக அளவில் விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. India eyes global stage for ports

ஏற்கனவே, ஈரானில் உள்ள சபாஹர் துறைமுகத்திலும், அதன் அருகிலுள்ள பிற துறைமுகங்களிலும் இந்தியா தனது செயல்பாடுகளை தொடங்கியுள்ளது.

India eyes global stage for ports

தற்போது, ஆப்பிரிக்க கண்டத்தின் கிழக்கு கடற்கரை நாடான தான்சானியாவில் தொடங்கி, சில ஆப்பிரிக்க நாடுகளில் துறைமுகம் கட்டுவதற்கான சாதகமான வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறது.

இந்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சக அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த விரிவாக்க முயற்சிகள், வெளிநாடுகளில் துறைமுகத் திட்டங்களை மேம்படுத்துவதற்காக “ஜவஹர்லால் நேரு துறைமுக அறக்கட்டளை” மற்றும் “கண்ட்லா துறைமுக அறக்கட்டளை” ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட கூட்டு முயற்சி நிறுவனமான “இந்தியன் போர்ட்ஸ் குளோபல் லிமிடெட்” (IPGL) மூலம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவும் தான்சானியாவும் தொழில்துறை பூங்காக்கள், துறைமுக செயல்பாடுகள் மற்றும் கடல்சார் ஒத்துழைப்பு உள்ளிட்ட கடல்சார் மற்றும் துறைமுக உள்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MoU) கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதன் அடிப்படையில் இந்தியாவின் அடுத்த கப்பல் தளம் கட்டப்படும் அதிக வாய்ப்புள்ள நாடாக தான்சானியா இருக்கும் என்று நம்பப்படுகிறது.

துறைமுகங்கள் என்பது வணிகத்தின் முக்கியமான அடித்தளம். அவை சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி, வர்த்தகம் ஆகியவற்றுக்கான முக்கிய வாயிலாக உள்ளன. ஒரு நாடு மற்றொரு நாட்டின் துறைமுகத்தில் முதலீடு செய்வதன் மூலம், அதன் வர்த்தகக் கட்டுப்பாட்டை பெருக்கும். இது அரசியல் ரீதியாகவும் ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்.

சில நாடுகள் தங்கள் கடற்படைக்கான ஆதாரக் கட்டமைப்பாக (naval base) வெளிநாட்டு துறைமுகங்களைப் பயன்படுத்த விரும்பும். இது கடல் வழித் திசைகள், மாற்றுப்பாதைகள், மற்றும் அருகிலுள்ள எதிரிகளுக்கு எதிரான கண்காணிப்பு போன்ற சாத்தியங்களை உருவாக்கும்.

உதாரணமாக, சீனா ஹம்பாந்தோட்டா துறைமுகம் (இலங்கை) மற்றும் பாகிஸ்தானில் உள்ள க்வாடார் துறைமுகங்களில் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை கூறலாம். India eyes global stage for ports

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share