அத்துமீறும் பாகிஸ்தான்… ஏவுகணையை வானிலேயே அழித்த இந்தியா!

Published On:

| By Kavi

 India destroys pakistan missile

இந்தியாவும் பாகிஸ்தானும்  மாறி மாறி தாக்குதலை தொடர்வதால் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. India destroys pakistan missile

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத முகாம்கள் மீது மே 7ஆம் தேதி நள்ளிரவு இந்தியா தாக்குதல் நடத்தியது. இதில் 9 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.

ADVERTISEMENT

இதனால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பதற்றத்தை குறைக்குமாறு ஐநா பாகிஸ்தானையும் இந்தியாவையும் கேட்டுக்கொண்டது.

இந்த சூழலில் நேற்று இரவு வெவ்வேறு நகரங்களுக்கு அனுப்பப்பட்ட 12 இந்திய ட்ரோன்களை அழித்ததாக பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷரீஃப் சவுத்ரி கூறியுள்ளார்.

ADVERTISEMENT

நாகூர், குஜ்ரன்வாலா, சக்குவால், அட்டாக், ராவல்பிண்டி, பஹவல்பூர், கராச்சி உள்ளிட்ட பகுதிகளில் இந்திய ட்ரோன்களை அழித்ததாக கூறியுள்ள அகமது ஷரீஃப் சவுத்ரி, இவற்றில் ஒரு ட்ரோன் கீழே விழுந்ததில் சிந்து மாகாணத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் இன்று (மே 8) ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

அதில், “மே7 – மே 8 இரவு, இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள அவந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அமிர்தசரஸ், கபூர்தலா, ஜலந்தர், லூதியானா, ஆதம் பூர், பட்டிண்டா, சண்டிகர், உள்ளிட்ட பகுதிகளில் இந்திய ராணுவ இலக்குகளை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்க முயன்றது.

இந்த ஏவுகணைகளை இந்தியா வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் செயலிழக்க செய்தது. அதேசமயம் இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தானின் பல இடங்களில் வான் பாதுகாப்பு ரேடர்கள் மற்றும் அமைப்புகளை குறி வைத்தன.

லாகூரில் உள்ள ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு செயலிழக்க செய்யப்பட்டதாக நம்பத்தகுந்த முறையில் அறியப்படுகிறது.  India destroys pakistan missile

அதுபோன்று ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா, உரி, பூஞ்ச், ராஜோரி ஆகிய எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கி சூட்டின் தீவிரத்தை அதிகரித்துள்ளது.

பாகிஸ்தான் துப்பாக்கி சூட்டில் இதுவரை மூன்று பெண்கள் மற்றும் ஐந்து குழந்தைகள் உட்பட 16 அப்பாவி பொதுமக்கள் பலியாகியுள்ளனர். இதனால் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபின் அமிர்தசரஸ் பகுதியில் பாகிஸ்தான் ஏவுகணையை இடைமறித்து இந்தியா  அழித்திருக்கிறது.  தற்போது பஞ்சாபில் வயல் பகுதியில், சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ஏவுகணைகள் கிடக்கும் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.  India destroys pakistan missile

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share