பாகிஸ்தானுடனான மோதலுக்குப் பிறகு இந்தியா மத்திய கிழக்கு (வளைகுடா) நாடுகளுடன் தனது பொருளாதார உறவுகளை ஆழப்படுத்தி வர்த்தக ஒப்பந்தங்களை இறுதி செய்துள்ளது. India Deep Trade Ties with Gulf Countries
இதற்கான முக்கியமான காரணங்களாக அமைவது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த மோதலின் போது இரு தரப்பினருக்கும் இடையில் பெரும்பாலான வளைகுடா நாடுகள் நடுநிலையான நிலைப்பாட்டை எடுத்தன, அதே நேரத்தில் நிதானத்தையும் பதற்றத்தைக் குறைக்கவும் வலியுறுத்தின.
இதன் மூலம் இந்தியா இந்த பிராந்தியத்தில் தனது பழைய நட்புறவு நாடான ஓமனுடன் விரைவில் ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது.
இந்தியா – ஓமன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டன. மேலும், இந்த மாதமே அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. India Deep Trade Ties with Gulf Countries
கத்தார் போன்ற பிற வளைகுடா நாடுகளுடன் இதேபோன்ற ஒப்பந்தங்களை இந்தியா தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

கடந்த பிப்ரவரியில் இந்தியாவுக்கு வருகை தந்த கத்தாரின் அமிர் இந்தியாவில் பெரிய முதலீடுகளைச் செய்ய விரும்புவதாக தெரிவித்தார்.
மேலும், இந்தியா – பாகிஸ்தான் மோதலின் போது கத்தார் நடுநிலை வகித்தது என்பது குறிப்பிடத்தக்கது. India Deep Trade Ties with Gulf Countries
இந்தியா ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகத்துடன் (UAE) வர்த்தக ஒப்பந்தத்தைக் கொண்டுள்ளது. வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலுடன் (GCC) ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்காக (FTA) பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இது பிராந்தியத்துடன் வர்த்தகம், எரிசக்தி, முதலீடு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துகிறது. GCC-யில் சவுதி அரேபியா, UAE, கத்தார், குவைத், ஓமன் மற்றும் பஹ்ரைன் ஆகியவை அடங்கும்.
2025 நிதியாண்டின் ஏப்ரல் – பிப்ரவரி காலகட்டத்தில் ஓமனுக்கான இந்தியாவின் பொருட்கள் ஏற்றுமதி 37,000 கோடி ரூபாயை எட்டியது.
அதே நேரத்தில் இறக்குமதி 38,000 கோடியாக இருக்கிறது. இந்தியாவின் முக்கிய இறக்குமதிகளில் பெட்ரோலிய பொருட்கள் மற்றும் யூரியா ஆகும். இவை இறக்குமதி செலவில் 70% க்கும் அதிகமாகும்.
அதேபோல் கத்தாருடன் 14,500 கோடி ரூபாய் ஏற்றுமதியும், ஒரு லட்சத்து ஐந்தாயிரம் கோடி இறக்குமதியும் செய்கிறது.
இந்தியா கத்தாரிலிருந்து மிகப்பெரிய அளவில் திரவமயமான இயற்கை வாயுவை இறக்குமதி செய்கிறது. இது இந்தியாவின் சக்தி தேவையை பூர்த்தி செய்ய முக்கிய பங்கு வகிக்கிறது.
இயற்கை வாயுவுடன் சேர்த்து, கச்சா எண்ணெய் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற எரிபொருட்களும் இறக்குமதி செய்யப்படுகின்றன.
ஐக்கிய அரபு அமீரகத்துடன் இந்தியா மூன்று லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதியும் நான்கு லட்சம் கோடி ரூபாய் இறக்குமதியும் செய்கிறது.
இந்தியா, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து அதிக அளவில் தங்கம் மற்றும், அலங்கரிக்கப்பட்ட நகைகள், வைரங்கள் மற்றும் விலையுயர்ந்த கற்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்கிறது.
ஒட்டுமொத்தமாக வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில்(GCC) உள்ள நாடுகளில் இருந்து இந்தியா ஒட்டுமொத்தமாக 4.42 லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதி செய்கிறது. அதுவே இறக்குமதியின் அளவு 9.2 லட்சம் கோடியாக உள்ளது.
வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா அதிக அளவிற்கான கச்சா எண்ணையை இறக்குமதி செய்கின்ற காரணத்தினால் வர்த்தக பற்றாக்குறையின் அளவு அதிகம் இருக்க காரணமாக உள்ளது. India Deep Trade Ties with Gulf Countries