இந்தியா: ஆறு நாட்களில் 12.7 லட்சம் தடுப்பூசிகள்!

Published On:

| By Balaji

இந்தியாவில் ஆறு நாட்களில் 12.7 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இது உலகில் மிக விரைவாக நடைபெற்று வரும் தடுப்பூசி பணியாகும்.

கொரோனா வைரஸுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனேகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கி, புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கும் கோவிஷீல்டு மற்றும் ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து அளிக்கும் கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய தலைமை மருந்துகட்டுப்பாட்டு இயக்குநரகம் கடந்த 3ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.

ADVERTISEMENT

அதைத் தொடர்ந்து இந்தியாவில் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. கடந்த 16ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடந்த ஆறு நாட்களில் கொரோனா தொற்றுக்கு எதிராக 12 லட்சத்துக்கும் அதிகமான அளவிலான தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளது.

ஜனவரி 16ஆம் தேதி தொடங்கிய இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்தில் ஒரு வாரம், கிட்டத்தட்ட 12.7 லட்சம் தடுப்பூச்சிகள் போடப்பட்டு உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ஜனவரி 20ஆம் தேதிக்குள் 1.5 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டதாக கூறப்படும் சீனாவில் தடுப்பூசி புள்ளிவிவரங்கள் பகிரங்கமாகக் கிடைக்கவில்லை. பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசியை உருவாக்கிய சீன அரசாங்கத்துக்கு சொந்தமான சினோபார்ம் குழுமத்தின் தலைவர் நவம்பர் மாதத்திலேயே சீனா 10 லட்சம் தடுப்பூசிகளை அடைந்துள்ளது என கூறினார்.

உலக அளவில் வியாழக்கிழமை வரை கிட்டத்தட்ட 5. 7 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அமெரிக்கா 1.75 கோடி தடுப்பூசிகளுடன் முன்னிலை வகிக்கிறது. அதைத் தொடர்ந்து சீனா (1.5 கோடி), இங்கிலாந்து (54 லட்சம்), இஸ்ரேல் (33 லட்சம்), ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (23 லட்சம்), ஜெர்மனி (14 லட்சம்), இத்தாலி (13 லட்சம்), துருக்கி (11 லட்சம்) மற்றும் ஸ்பெயின் (11 லட்சம்). இந்தியா 10ஆவது இடத்தில் இருந்தது.

ADVERTISEMENT

எவ்வாறாயினும், தடுப்பூசி இயக்கம் தாமதமாக ஆரம்பித்த போதிலும் இந்தியாவில் தடுப்பூசி மிகமிக வேகமாக போடப்பட்டு வருகிறது. சீனாவைத் தவிர்த்து, மற்ற நாடுகளை விட இது வேகம் ஆகும். 10 லட்சம் என்பது நாட்டின் 100 பேருக்கு வெறும் 0.08 சதவிகிதம்தான்.

இதன் அடிப்படையில் இஸ்ரேல் மற்ற நாடுகளை விட மிகவும் முன்னிலையில் உள்ளது, ஒவ்வொரு 100 குடிமக்களில் 38 பேருக்கு தடுப்பூசிகள் அங்கு வழங்கப்பட்டு உள்ளது. அரபு எமிரேட்ஸ் இதுவரை சிறந்த எண்ணிக்கையைக் கொண்டுள்ளது 100 பேருக்கு 22.7 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. பஹ்ரைன் (8.5), இங்கிலாந்து (8) மற்றும் அமெரிக்கா (5.3) ஆகும்.

**- ராஜ்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share