எதிர்க்கட்சி தலைவர்கள் மொபைல் போன் உளவு பார்க்கப்பட்டதா?

Published On:

| By Selvam

india bloc accused iphone hacking attempt

தங்கள் மொபைல் போனை அரசு ஆதரவுடன் ஹேக்கர்கள் உளவு பார்ப்பதாக இந்தியா கூட்டணி தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா, சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் ஆகியோர் ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து தங்களுக்கு வந்த எச்சரிக்கை குறுஞ்செய்தியை தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

ADVERTISEMENT

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி,

“பாஜகவின் அரசியலை நாங்கள் புரிந்துகொண்டோம். இப்போது அதானியால் தப்பிக்க முடியாது. திசை திருப்பும் அரசியல் நடக்கிறது. எனது அலுவலகத்தில் உள்ள பலருக்கு ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது.

ADVERTISEMENT

காங்கிரஸ் கட்சியில் கே.சி.வேணுகோபால், சுப்ரியா, பவன் கேரா உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும் குறுஞ்செய்தி வந்துள்ளது. வெகு சிலரே இதை எதிர்த்து வெளியில் பேசுகிறார்கள்.

ஆனால் நாங்கள் பாஜகவுக்கு பயப்படவில்லை. இது கிரிமினல்களும் திருடர்களும் செய்யும் வேலை. நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் போனை உளவு பாருங்கள். எனக்கு கவலையில்லை. எனது போன் வேண்டுமானாலும் கேளுங்கள் தருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மஹுவா மொய்த்ரா தனது ட்விட்டர் பக்கத்தில்,

“எனது போன் மற்றும் மின்னஞ்சலை அரசாங்கம் ஹேக் செய்ய முயற்சிப்பதாக ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து எச்சரிக்கை குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதே போல இந்தியா கூட்டணியை சேர்ந்த சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர் ராகவ் சந்தா, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர், சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்களுக்கும் குறுஞ்செய்தி வந்துள்ளது.

இது எமெர்ஜென்சியை விட மிக மோசமானது” என்று விமர்சித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்துள்ள மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்,

“இந்த பிரச்சனையை அரசு முழு அக்கறையுடன் கவனத்தில் எடுத்து விசாரிக்கும். ஆப்பிள் நிறுவனம் 150 நாடுகளில் உள்ள பயனர்களுக்கு இதேபோன்று குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது.

அந்நிறுவனம் அனுப்பிய குறுஞ்செய்தியில் தெளிவான தகவல்கள் இல்லை. நாட்டின் வளர்ச்சியை தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் நாசகரமான அரசியல் செய்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

செல்வம்

அக்டோபர் மாதத்தில் இயல்பை விட குறைந்த பருவமழை!

’அந்த எண்ணை தொடர்பு கொள்ள வேண்டாம்’: TANGEDCO எச்சரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share