பாகிஸ்தானின் மற்றொரு முக்கிய நகரமான லாகூர் மீது இந்திய ராணுவம் அதிரடித் தாக்குதல் நடத்தியதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜம்மு காஷ்மீரின் ஶ்ரீநகர் விமான நிலையம் மற்றும் எல்லை பகுதிகளை பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது. இந்தத் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்ட பாகிஸ்தானின் டிரோன்கள், ஏவுகணைகள் அழிக்கப்பட்டன. இதேபோல பஞ்சா, ராஜஸ்தான் எல்லை பகுதிகளிலும் பாகிஸ்தான் தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.

பாகிஸ்தானின் இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் பாகிஸ்தான் நாட்டின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றான லாகூர் மீதும் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக இன்று லாகூரில் பாகிஸ்தானின் வான் கட்டுப்பாட்டு அமைப்பை இந்தியா தாக்கி அழித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
