மீண்டும் கூடும் ‘இந்தியா கூட்டணி’- ஜூலை 19-ல் வீடியோ கான்பரன்ஸ்!

Published On:

| By Mathi

India Alliance

காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளை உள்ளடக்கிய ‘இந்தியா கூட்டணி’ ஆலோசனைக் கூட்டம் ஜூலை 19-ந் தேதி நடைபெற உள்ளது. India Alliance DMK

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக அகில இந்திய அளவில் உருவாக்கப்பட்டது இந்தியா கூட்டணி. மாநிலங்களில் எதிரும் புதிருமாக இருந்தாலும் அகில இந்திய அளவில் பாஜக அல்லாத, மதச்சார்பின்மையை முன்னிறுத்தும் கட்சிகள் ஓரணியில் திரண்டு ‘இந்தியா கூட்டணியை’ உருவாக்கி உள்ளன.

ADVERTISEMENT

காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, ஆம் ஆத்மி, மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் இந்தக் கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. நாடாளுமன்ற நடவடிக்கைகளில் மத்திய அரசுக்கு எதிராக இந்தியா கூட்டணி எம்பிக்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் ஜூலை 19-ந் தேதி நடைபெறும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் அறிவித்துள்ளார். வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் தற்போதைய அரசியல் சூழல், நாடாளுமன்றத்தில் இணைந்து செயல்படுவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share