ஸ்டாலின் இல்லாமல் டெல்லியில் ’இந்தியா’ கூட்டம்: அஜெண்டா என்ன?

Published On:

| By Aara

மக்களவைத் தேர்தலின் ஏழாவது மற்றும் இறுதிக் கட்ட தேர்தல் இன்று (ஜூன் 1) நடந்துகொண்டிருக்கும் நேரத்தில்… மாலை 3 மணிக்கு டெல்லியில் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டம் தொடங்கியது.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்தில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

கார்கேவின் தலைமையில் காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார்,

Image

ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், திமுக சார்பில் டி.ஆர்.பாலு, ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், ஜே.எம்.எம். கட்சி சார்பில் முதல்வர் சாம்பாய் சோரன், கல்பனா சோரன், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, இந்திய கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிவசேனா சார்பில் அனில் தேசாய் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தக் கூட்டம் பற்றி கருத்து வெளியிட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கே,

“வாக்கு எண்ணும் நாளுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆராய இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் இன்று முறைசாரா முறையில் கூடியிருக்கிறோம். போராட்டம் இன்னும் ஓய்ந்தபாடில்லை, அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும், தொண்டர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளனர்.

அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் மதிப்பிற்குரிய வருகைக்காக நான் நன்றி கூறுகிறேன்.
லோக்சபா தேர்தல் 2024-ஐ நாம் நமது முழு பலத்துடன் எதிர்த்துப் போராடியுள்ளோம், மேலும் இந்திய மக்கள் எங்களுக்கு ஆதரவளித்ததால், நேர்மறையான முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இக்கூட்டத்தில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் கலந்துகொள்ளவில்லை. அவருக்கு பதிலாக திமுக பொருளாளரும் நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு கலந்துகொண்டுள்ளார்.

இன்று தேர்தல் நடக்கும் மாநிலங்களான உத்திரப்பிரதேசம், பிகார், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இருந்து அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், பகவந்த் மான் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருப்பது குறிப்பிடத் தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேந்தன்

நாடெங்கும் வெப்ப அலை: 74 பேர் உயிரிழப்பு!

கோலி சிறந்த வீரர் தான், ஆனால்…. – கங்குலி சொன்ன குட் ஐடியா!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share