சுதந்திர தினம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி தொடர் விடுமுறைகளை முன்னிட்டு சென்னையில் இருந்து கோவை போத்தனூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
சேலம் கோட்ட ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆகஸ்ட் 14-ந் தேதி இரவு 11.50 மணிக்கு சிறப்பு ரயில் வண்டி எண் 06027 இயக்கப்படும். போத்தனூர் ரயில் நிலையத்தை ஆகஸ்ட் 15-ந் தேதி காலை 8.30 மணிக்கு இந்த சிறப்பு ரயில் வந்தடையும்.
போத்தனுரில் இருந்து ஆகஸ்ட் 17-ந் தேதி இரவு 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் வண்டி எண் 06028 ஆகஸ்ட் 18-ந் தேதி காலை 8.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடையும்.
சென்னை- போத்தனூர் சிறப்பு ரயில், பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
