இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4- வது டெஸ்ட் போட்டியின் போது ரோஹித் சர்மா, சர்பராஸ் கானை அதட்டிய வீடியோ வைரலாகி வருகிறது. ind vs eng rohit sharma sarfaraz khan
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இதில் இந்தியா 2-1 என முன்னிலை வகித்து வருகிறது.
தற்போது இங்கிலாந்து-இந்தியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா இன்று (பிப்ரவரி 26) இரண்டாவது இன்னிங்ஸினை ஆடிவருகிறது.
இன்னும் 74 ரன்கள் எடுத்தால் இந்த 4-வது டெஸ்டில் இந்தியா வெற்றி பெறும். அதோடு டெஸ்ட் தொடரினையும் கைப்பற்றி விடும். 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்தியா தற்போது 118 ரன்கள் எடுத்துள்ளது.
கில் (18) ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா (3) ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தற்போதைய சூழலில் இந்தியாவிற்கான வெற்றிவாய்ப்பு பிரகாசமாகவே உள்ளது.
இந்தநிலையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் லேட்டஸ்ட் சென்சேஷன் சர்பராஸ் கானை, ரோஹித் சர்மா அதட்டிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
நேற்று (பிப்ரவரி 25) நடைபெற்ற 3-வது நாள் ஆட்டத்தின் போது ரோஹித் சர்மா, சர்பராஸ் கானை ஷார்ட் லெக் திசையில் பேட்ஸ்மேனுக்கு அருகில் நிற்க வைத்தார். அதேபோல நின்ற சர்பராஸ் ஹெல்மெட் அணியாமல் பீல்டிங் செய்யத் தயாரானார்.
இதைப்பார்த்த ரோஹித், ”தம்பி! இங்கு ஹீரோவாக மாற நினைக்காதே”, என அவரைக் கடிந்து கொண்டு உடனடியாக ஹெல்மெட் எடுத்து வரச்சொல்லி சர்பராசை அணிய வைத்தார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
🔊 Hear this! Rohit does not want Sarfaraz to be a hero?🤔#INDvsENG #IDFCFirstBankTestSeries #BazBowled #JioCinemaSports pic.twitter.com/ZtIsnEZM67
— JioCinema (@JioCinema) February 25, 2024
இதைப்பார்த்த ரசிகர்கள், ”ஒரு கேப்டன் இப்படித்தான் இருக்க வேண்டும்” என ரோஹித்தை மனதாரப் பாராட்டி வருகின்றனர்.
கோலி, கே.எல்.ராகுல் இல்லாத சூழலில் யஸஷ்வி ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான், துருவ் ஜுரெல், ரஜத் படிதார், ஆகாஷ் தீப் என இளம்வீரர்கள் இந்திய அணியின் வெற்றிவாய்ப்பை ஒவ்வொரு ஆட்டத்திலும் உறுதி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சரிவில் தங்கம்: 1 சவரனின் விலை இதுதான்!
ind vs eng rohit sharma sarfaraz khan