இந்த மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள வங்கதேச அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடுகிறது.
இதில் முதலாவதாக டெஸ்ட் போட்டிகள் செப்டம்பர் 19 அன்று துவங்குகிறது. இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டிக்கான இந்திய டெஸ்ட் அணியை பிசிசிஐ (இந்திய கிரிக்கெட் வாரியம்) அறிவித்துள்ளது.
அதில், நட்சத்திர வீரரான 20 மாதங்களுக்கு ரிஷப் பண்ட் இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளார். அதேபோல, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை தவறவிட்ட விராட் கோலியும் அணிக்கு திரும்பியுள்ளார்.
டி20 உலகக்கோப்பைக்கு பிறகு, ஓய்வில் இருந்த ஜஸ்பிரித் பும்ராவும் அணிக்கு திரும்பியுள்ளார்.
ரோகித் சர்மா தலைமையிலான அணியில், இளம் நட்சத்திரங்கள் யசஸ்வி ஜெய்ஸ்வால், சர்ஃபராஸ் கான், துருவ் ஜுரேல் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
அதேபோல, யஷ் தயாள், ஆகாஷ் தீப் ஆகிய இளம் வீரர்களுக்கும் இந்த டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல் என வலுவான சுழற்பந்து வீச்சாளர்களுடன், இந்த தொடரில் இந்தியா களமிறங்கவுள்ளது.
குறிப்பிடத்தக்கதாக, ஷ்ரேயஸ் அய்யருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்திய அணி:
ரோகித் சர்மா (C), யசஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், சர்ஃபராஸ் கான், ரிஷப் பண்ட் (WK), துருவ் ஜுரேல் (WK), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, யஷ் தயாள், ஆகாஷ் தீப்
இந்தியா vs வங்கதேசம் அட்டவணை
முதல் டெஸ்ட் | செப்டம்பர் 19 – அக்டோபர் 1 | சென்னை
2வது டெஸ்ட் | செப்டம்பர் 27 – அக்டோபர் 1 | கான்பூர்
முதல் டி20 | அக்டோபர் 6 | குவாலியர்
2வது டி20 | அக்டோபர் 9 | டெல்லி
3வது டி20 | அக்டோபர் 12 | ஐதராபாத்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– மகிழ்
அநீதியை தட்டிக்கேட்ட சங்கரை தலைமையாசிரியாக நியமிக்க வேண்டும்: அமீர் கோரிக்கை!