இந்தியாவின் பொருட்களின் ஏற்றுமதி ஏப்ரல் மாதத்தில் 9.03 சதவீதம் வளர்ச்சியடைந்து 38.49 பில்லியன் (இந்திய மதிப்பில் 3.20 லட்சம் கோடி) அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது என வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. Increasing trade deficit… Warning to India!
அதே நேரத்தில், ஏப்ரல் மாத இறக்குமதி 19.12 சதவீதம் அதிகரித்து 64.91 பில்லியன் டாலராக(5.5 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது. இதனால் 26.42 பில்லியன் டாலர் (2.2 லட்சம் கோடி) வர்த்தக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்த தொடர்பாக கருத்து தெரிவித்த வர்த்தக செயலாளர் சுனில் பாரத்வால், “தற்போதைய ஏற்றுமதி ஊக்கம் தொடரும்” என்ற நம்பிக்கையை வெளியிட்டார்.
ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி 20.72 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது மார்ச் மாதத்தில் இருந்த 19 பில்லியன் டாலருடன் ஒப்பிட்டால் அதிகம்.
ஆனால் தங்கத்தின் இறக்குமதி ஏப்ரல் மாதத்தில் 3.1 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. இது முந்தைய மாதமான மார்சில் 4.4 பில்லியன் டாலராக இருந்தது.
குறிப்பாக, ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா பல்வேறு விதமான பொருளாதாரத் தடைகளை விதித்த போதிலும் இந்தியா ரஷியாவிலிருந்து ஏப்ரல் மாதத்தில் 6.23 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்துள்ளது. இது கடந்த ஆண்டின் அதே மாதத்தைவிட 17.7 சதவீதம் அதிகம்.

ரஷியா இந்தியாவுக்கு முக்கியமான கச்சா எண்ணெய் வளமாகும். மேலும், சீனாவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்த தொகை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1.25 பில்லியன் டாலராக இருந்ததைவிட அதிகமாகி, இந்த ஆண்டு ஏப்ரலில் 1.41 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
தரவுகளின்படி, இந்தியாவின் முக்கிய ஐந்து ஏற்றுமதி நாடுகள் என்னவென்றால்
அமெரிக்கா
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
ஆஸ்திரேலியா
டான்சானியா
கென்யா
அதேபோல் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் முக்கிய ஐந்து இறக்குமதி நாடுகள் என்னவென்றால்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
சீனா
அமெரிக்கா
ரஷியா
அயர்லாந்து
உலக வர்த்தக சூழ்நிலை பல இடர்களை சந்தித்துள்ளது. குறிப்பாக, அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் விதித்த பரஸ்பர வரிவிதிப்புகளாள் (reciprocal tariff) இக்குழப்பங்களுக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் அமெரிக்கா இந்தியாவில் இருந்து கொண்டு வரும் சில பொருட்களுக்கு 26 சதவீத வரி விதித்தது. இது சீனா, வியட்நாம் மற்றும் வங்கதேசம் ஆகியவற்றைவிட குறைவான அளவு தான்.
அத்துடன், இந்தியா அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்த தொகை கடந்த ஆண்டு ஏப்ரலில் 6.61 பில்லியன் டாலராக இருந்ததைவிட உயர்ந்து, இந்த ஆண்டு ஏப்ரலில் 8.42 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இப்போது பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதன் காரணமாக இந்த வரிகள் தற்காலிகமாக 90 நாட்களுக்கு அதாவது ஜூலை 8 வரை நிறுத்தப்பட்டுள்ளன. சீனாவுடன் தொடர்புடைய வரிகளும் சமீபத்தில் ஒப்பந்தத்தின் மூலம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
முக்கியமாக, அமெரிக்கா இந்தியாவுடன் விரிவான வர்த்தக ஒப்பந்தத்தை முடிக்கவும் இந்தியாவுடன் ஒரு ஒப்பந்தம் விரைவில் நடைபெற முயற்சி செய்து வருகிறது என்பதை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த வியாழக்கிழமை அன்று பேசியதும் குறிப்பிடத்தக்கது.