இந்தியாவின் வேலையின்மை விகிதம் 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக, இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) தெரிவித்துள்ளது.
இந்தியாவின் வேலையின்மை விகிதம் டிசம்பரில் 8.3 சதவீதமாக உயர்ந்துள்ளது, இது கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. மேலும் வேலையின்மை சதவீதம் முந்தைய மாதத்தில் 8 சதவீதமாக இருந்தது என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) தெரிவித்துள்ளது.
அதிகரிக்கும் வேலையின்மை விகிதம்
நகர்ப்புற வேலையின்மை விகிதம் டிசம்பரில் 8.96 சதவீதத்திலிருந்து, 10.09 சதவீதமாக உயர்ந்துள்ளது. இருப்பினும் கிராமப்புற வேலையின்மை விகிதம் சற்று ஆறுதல் அளித்துள்ளது. நவம்பர் மாதம் 7.55 விழுக்காடாக இருந்த அந்த விகிதம் டிசம்பரில் 7.44 என சற்று இறங்கியுள்ளது.
கிராமப்புற மக்களில் சிறிய விகிதத்தினர் டிசம்பரில் வேலை பெற்றதை இது உணர்த்துவதாக ஆய்வு நடத்திய சிஎம்ஐஇ-யின் தரவுகள் தெரிவிக்கின்றன.
வேலைவாய்ப்பு விகிதமும் டிசம்பரில் அதிகமாக இருந்தது என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மைய நிர்வாக இயக்குநர் மகேஷ் வியாஸ் தெரிவித்துள்ளார். 2022 ஜனவரி முதல் கணக்கெடுத்ததில் டிசம்பர் மாதத்தில் வேலைவாய்ப்பு விதிகம் 37.1 விழுக்காட்டுக்கு அதிகரித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பணவீக்க அதிகரிப்பும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலையை உருவாக்கித் தருவதும் பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாகத்திற்கு ஆகப் பெரிய சவால்களாக இருந்து வருகின்றன என்று தரவுகள் கூறுகின்றன.
மு.வா.ஜெகதீஸ் குமார்
சபரிமலையில் ஒரு லட்சம் பேர் தரிசனம்!
உக்ரைன் போரைப் பயன்படுத்தி ரஷ்யாவை துண்டாக்க முயற்சி செய்கிறார்கள்: புதின்
